News October 14, 2025
வங்கி கடன்.. வந்தது HAPPY NEWS

ஓராண்டில் மட்டும் ரெப்போ வட்டி விகிதம் 1% வரை குறைந்ததால், கடன் வட்டி விகிதங்களை வங்கிகள் குறைத்து வருகின்றன. குறிப்பாக, இந்த மாதத்தில் பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் வங்கி, IDBI வங்கி உள்ளிட்டவை கடனுக்கான MCLR விகிதங்களை 0.05% வரை குறைத்துள்ளன. அதனால், அந்த வங்கிகளில் வீடு, வாகன கடன் பெற்றவர்களின் EMI குறைந்துள்ளது. இது சிறிய தொகை என்றாலும், நீண்ட கால கடன் பெற்றவர்களுக்கு பலனாக அமையும். SHARE IT.
Similar News
News October 15, 2025
தனியார் பள்ளிகளுக்கு 31-ம் தேதி வரை கெடு

கல்வி உரிமை சட்டத்தில் சேர்க்கப்பட்ட ஏழை மாணவர்களின் விவரங்களை வரும் 31-ம் தேதிக்குள் சமர்பிக்க, தனியார் பள்ளிகளுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இடைப்பட்ட காலத்தில் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது. வரும் 17-ம் தேதிக்குள் விவரங்களை சமர்பிக்க தனியார் பள்ளிகளின் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பிய நிலையில், அதை எதிர்த்து தனியார் பள்ளிகள் சங்கங்கள் வழக்கு தொடர்ந்தன.
News October 15, 2025
ஜெயலலிதா முன்பு இப்படி பேச முடியுமா? அமைச்சர்

தேர்தல் நேரத்தில் பொண்டாட்டி கூட இலவசமாக வழங்குவார்கள் என சி.வி.சண்முகம் மிக கீழ்த்தரமாக பேசியதாக அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா இருக்கும் போது அவரால் இப்படி பேசியிருக்க முடியுமா? ஒரு கண்டனம் கூட தெரிவிக்காத EPS வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள்தானே என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். பெண்கள் மீது அதிமுகவிற்கு இருக்கும் வக்கிரம் வெளிப்பட்டிருப்பதாகவும் சாடியுள்ளார்.
News October 15, 2025
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்

உணவு, உடை, வேலை சூழல் என அன்றாட வாழ்க்கை முறை மாறி வருகிறது. இந்த சூழலில் நமது உடல்நலத்தை பேணுவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த சூழலில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்யத்தை மேம்படுத்த உதவுகிறது. அந்த வகையில், சர்க்கரை வள்ளிக்கிழங்கின் பல நன்மைகள் அடங்கியுள்ளன. அதனை மேலே Swipe செய்து தெரிந்து கொள்ளுங்கள்.