News October 14, 2025
முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக

பிஹாரில் கூட்டணி ஒப்பந்தத்தின்படி 101 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகின்றது. இந்நிலையில், 71 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. மீதமுள்ள 30 வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. DCM சாம்ராட் சவுத்ரி, தாராப்பூர் தொகுதியிலும், மற்றொரு DCM விஜயகுமார் சின்ஹா, லக்கிசாராய் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர். 9 பெண் வேட்பாளர்கள் பட்டியலில் உள்ளனர்.
Similar News
News October 15, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 15, புரட்டாசி 29 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:00 AM -10:30 AM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: நவமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சிறப்பு: புதன் வழிபாட்டு நாள், கரிநாள். ▶வழிபாடு: நவ கிரகத்தில் உள்ள புதன் பகவானுக்கு பச்சைப்பயறு நைவேத்யம் செய்து வழிபடுதல்.
News October 15, 2025
தேர்வுக்குழு மீது ஷமி அதிருப்தி

ஆஸி.,க்கு எதிரான ODI தொடரில் தேர்வு செய்யப்படாததன் காரணம் புரியவில்லை என ஷமி தெரிவித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி, ஐபிஎல், துலீப் டிராபி என தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கும் தன்னிடம், ஃபிட்னஸ் குறித்து தேர்வுக்குழு விவாதிக்கவில்லை என அவர் கூறியுள்ளார். மேலும், ஒரு அணியை தேர்வு செய்யும் முன், வீரர்களிடம் ஃபிட்னஸ் குறித்து ஆலோசிப்பது தேர்வுக்குழுவின் கடமை என்றும் தெரிவித்துள்ளார்.
News October 15, 2025
பாக்., – ஆப்கன் மீண்டும் மோதல்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே கடந்த சில நாள்களாக பதற்றம் நீடித்து வருகிறது. இருநாடுகளும் மாறி மாறி தாக்கிக் கொண்டிருந்த நிலையில், பிற இஸ்லாமிய நாடுகள் அறிவுறுத்தல்களால் தாக்குதல் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், நள்ளிரவில் மீண்டும் பாக்., முகாம்களை குறிவைத்து ஆப்கன் தாக்குதலை நடத்தியுள்ளது. பாக்., தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவு தகவல்கள் வெளியானதை தொடர்ந்து ஆப்கன் நடவடிக்கை எடுத்துள்ளது.