News October 14, 2025
பெளர்ணமி நிலவாய் பிரகாசிக்கும் ருக்மினி!

‘என் மூச்சவ பேச்சவ, பேர் சொல்லும் அழகவ, எனக்குள்ள கலக்குற ஆக்ஸிஜன் அளவவ’ என்ற ‘டியூட்’ பாடல் வரிகளை தமிழ் ரசிகர்களை ரிபீட் மோடில் பாட வைத்துவிட்டார் ருக்மினி வசந்த். மூன்றே படத்தில் ரசிகர்களின் மனதில் அடுத்த 30 வருடங்களுக்கு குடியேறிவிட்ட அவர், புதிய போட்டோஷுட் நடத்தி SM-ல் பதிவிட்டுள்ளார். இதற்கு ஹார்ட் பதிவிடும் ரசிகர்கள், அடுத்த தமிழ் படத்தின் அப்பேட் கேட்டு அன்பு தொல்லை கொடுக்கின்றனர்.
Similar News
News October 15, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 15, புரட்டாசி 29 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:00 AM -10:30 AM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: நவமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சிறப்பு: புதன் வழிபாட்டு நாள், கரிநாள். ▶வழிபாடு: நவ கிரகத்தில் உள்ள புதன் பகவானுக்கு பச்சைப்பயறு நைவேத்யம் செய்து வழிபடுதல்.
News October 15, 2025
தேர்வுக்குழு மீது ஷமி அதிருப்தி

ஆஸி.,க்கு எதிரான ODI தொடரில் தேர்வு செய்யப்படாததன் காரணம் புரியவில்லை என ஷமி தெரிவித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி, ஐபிஎல், துலீப் டிராபி என தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கும் தன்னிடம், ஃபிட்னஸ் குறித்து தேர்வுக்குழு விவாதிக்கவில்லை என அவர் கூறியுள்ளார். மேலும், ஒரு அணியை தேர்வு செய்யும் முன், வீரர்களிடம் ஃபிட்னஸ் குறித்து ஆலோசிப்பது தேர்வுக்குழுவின் கடமை என்றும் தெரிவித்துள்ளார்.
News October 15, 2025
பாக்., – ஆப்கன் மீண்டும் மோதல்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே கடந்த சில நாள்களாக பதற்றம் நீடித்து வருகிறது. இருநாடுகளும் மாறி மாறி தாக்கிக் கொண்டிருந்த நிலையில், பிற இஸ்லாமிய நாடுகள் அறிவுறுத்தல்களால் தாக்குதல் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், நள்ளிரவில் மீண்டும் பாக்., முகாம்களை குறிவைத்து ஆப்கன் தாக்குதலை நடத்தியுள்ளது. பாக்., தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவு தகவல்கள் வெளியானதை தொடர்ந்து ஆப்கன் நடவடிக்கை எடுத்துள்ளது.