News October 14, 2025

வேலூர்: அரசு திட்டங்கள் கிடைக்கவில்லையா..? இதை பண்ணுங்க

image

வேலூர் மக்களே உங்களுக்கு அரசு திட்டம் வந்து சேரவில்லையா? கவலை வேண்டாம். தமிழக அரசு “நீங்கள் நலமா?” என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு திட்டங்கள் சென்றடையாதவர்கள், இந்த<> லிங்க் மூலம்<<>> குறைகளைப் பதிவு செய்யலாம். இந்தத் தளத்தில், முதலமைச்சர் வீடியோ/ஆடியோ அழைப்புகள் மூலமாகவும், உயர் அதிகாரிகள் தொலைபேசி மூலமாகவும் நேரடியாக தொடர்புகொள்ளலாம். முதலமைச்சரின் நேரடிப் பார்வையில் குறைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும். ஷேர்

Similar News

News October 15, 2025

வேலூர் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

வேலூர் மாவட்டத்தின் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (அக்டோபர். 14) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டன. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் செய்யவும்.

News October 14, 2025

வேலூர் மாணவர்களுக்கு பரிசு வழங்கிய கலெக்டர்

image

இந்திய குழந்தைகள் நலச்சங்கம் வேலூர் மாவட்ட கிளையின் சார்பில், வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (அக்.14) ஓவியப்போட்டி நடைபெற்றது. இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தயாளன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News October 14, 2025

வேலூர்: மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லையா?

image

வேலூர் மக்களே, அரசு மருத்துவமனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் அல்லது உங்க மாவட்ட சுகாதார அலுவலகத்தில் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!