News October 14, 2025
பிரபல தமிழ் நடிகருக்கு திருமணம் முடிந்தது❤️❤️

சீரியல் நடிகர் தர்ஷனுக்கு இன்று திருமணம் முடிந்துள்ளது. அரண்மனை கிளி, காற்றுக்கென்ன வேலி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் தர்ஷன். தற்போது, கன்னட படங்களிலும் கதாநாயகனாக நடித்து வரும் இவர், காசின் தேவ்வயா என்பவரை கரம்பிடித்துள்ளார். இவர்களது திருமண போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News December 7, 2025
உலகின் மிக நீளமான விமான பயணம்!

உலகின் மிக நீளமான பயணிகள் விமான பயணத்தை சீனாவின் China Eastern Airlines நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரம் முதல் அர்ஜென்டினாவின் பியூனஸ் ஐரிஸ் நகரம் வரை மொத்தம் 29 மணி நேரம் இந்த பயணம் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 19,681 கிமீ தூரம் பறக்கும் இந்த விமானம், இடையில் நியூசிலாந்தின் ஆக்லாந்தில் மட்டும் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 7, 2025
‘அப்பா SORRY.. நான் சாகப் போகிறேன்’

‘அப்பா, என்னை மன்னித்துவிடுங்கள். இனிமேல் என்னால் தாங்க முடியாது. என் சாவுக்கு வேறு யாரும் காரணமில்லை, நான் மட்டுமே பொறுப்பு’. ம.பி., போபாலில் அக்கவுண்டண்டாக பணியாற்றி வந்த சுஜாதாவின்(27) கடைசி வரிகள் இவை. தீராத நோய் பாதிப்பில் இருந்த அவர், தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டது பெரும் சோகம். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது. தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்பதை உணருங்கள் நண்பர்களே!
News December 7, 2025
₹1,000 கோடிக்கு அதிபதியா தோனி?

9 மாதம் விவசாயம், 3 மாதம் விளையாட்டு என்று தோனியை பற்றி சில மீம்ஸ்களில் பார்த்திருப்போம். விளையாட்டை தாண்டி, பல்வேறு தொழில்களில் தோனி முதலீடு செய்துள்ளார். இதன் இன்றைய மதிப்பு ₹1,000 கோடியை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. CARS24, 7InkBrews, EMotorad, Khatabook, Seven, Mahi Racing போன்ற பிராண்ட்களிலும், ஹோட்டல் உள்ளிட்டவைகளிலும் அவர் முதலீடு செய்துள்ளார். பிஸ்னஸிலும் தோனி கேப்டன் தான் போல.


