News October 14, 2025
திருச்செங்கோடு: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பரில் வடமாநில ஏடிஎம் கொள்ளையர்களை சினிமா பாணியில் சேஸ் செய்து போலீசார் பிடித்தனர். இந்நிலையில், சம்பவத்தின் போது கைதிகளில் ஒருவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட நிலையில், வழக்கில் பிடிபட்ட இருவருக்கு தலா
12 ஆண்டுகள் சிறை தண்டனையும் எஞ்சிய 4 பேருக்கு தலா 24 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து திருச்செங்கோடு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
Similar News
News October 15, 2025
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று(அக்.14) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 14, 2025
நாமக்கல் : முட்டை விலை 5 பைசா உயர்வு!

நாமக்கல்: தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்நிலையில், இன்று(அக்.14) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 510 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டது.
News October 14, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு

நாமக்கலில் இருந்து நாளை(அக்.15) காலை 11:32 மணிக்கு மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர், திருநெல்வேலி, நாங்குநேரி, வள்ளியூர், நாகர்கோவில் செல்லவும் இரவு 9:15 மணிக்கு மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, அம்பாசமுத்திரம், தென்காசி, செங்கோட்டை, புனலூர், கொல்லம், காயங்குளம், செங்கனூர், செங்கணசேரி, கோட்டயம் போன்ற பகுதிகளுக்கு செல்லவும் ரயில்களில் டிக்கெட்டுகள் உள்ளன. மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.