News October 14, 2025

இராம்நாடு 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

image

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தேனியில் இன்று (அக் 14) முதல் அக்.18ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

Similar News

News October 14, 2025

ராமநாதபுரம்; விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்;

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் அக்டோபர் 2025-ம் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 17.10.2025 காலை 10.30 மணியளவில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாய கோரிக்கைகள் குறித்து பேசலாம் என கலெக்டர் சிம்ரன் ஜித் சிங் காலோன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News October 14, 2025

ராம்நாடு: ஊராட்சி வேலை.. APPLY செய்வது எப்படி?

image

ராமநாதபுரம் கிராம ஊராட்சி செயலர் பணிக்கு 17 காலியிடங்கள் உள்ளன. கல்வி தகுதி : 10th. கடைசி தேதி- நவ.9. முதலில் <>www.tnrd.tn.gov.in<<>> என்ற தளத்தில் APPLYஐ கிளிக் செய்து பெயர் உள்ளிட்ட விவரங்கள், கல்வி சான்று, வகுப்பு சான்று, புகைப்படம், கையொப்பம் ஆகியவற்றை பதிவேற்றி சமர்ப்பிக்க வேண்டும். பிறகு விண்ணப்ப கட்டணம் ரூ.100 செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். சொந்த ஊரில் அரசு வேலை உடனே SHARE பண்ணுங்க

News October 14, 2025

ராம்நாடு: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

ராமநாதபுரம் மக்களே, 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <>electoralsearch.eci.gov.in<<>> என்ற இணையதளத்தில் சென்று உங்கள் தரவுகளை வீட்டிலிருந்தே சரிபார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கபடுவதை தடுக்கலாம். SHARE

error: Content is protected !!