News October 14, 2025
கேரள ATM கொள்ளை கும்பல்: 10 ஆண்டு சிறை

கடந்த ஆண்டு கேரள ATM கொள்ளை கும்பலை நாமக்கல் போலீசார் சேஸ் செய்து பிடித்த விதம் சினிமாவை மிஞ்சும் காட்சியாக இருந்தது. அப்போது தப்ப முயன்ற நபரை போலீசார் என்கவுண்டரும் செய்திருந்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இருவருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்செங்கோடு கோர்ட் உத்தரவிட்டது. மேலும் 3 பேருக்கு 5 ஆண்டுகள் சிறையும், 6-வது குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறையும் விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 15, 2025
பாக்., – ஆப்கன் மீண்டும் மோதல்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே கடந்த சில நாள்களாக பதற்றம் நீடித்து வருகிறது. இருநாடுகளும் மாறி மாறி தாக்கிக் கொண்டிருந்த நிலையில், பிற இஸ்லாமிய நாடுகள் அறிவுறுத்தல்களால் தாக்குதல் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், நள்ளிரவில் மீண்டும் பாக்., முகாம்களை குறிவைத்து ஆப்கன் தாக்குதலை நடத்தியுள்ளது. பாக்., தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவு தகவல்கள் வெளியானதை தொடர்ந்து ஆப்கன் நடவடிக்கை எடுத்துள்ளது.
News October 15, 2025
தீபாவளி ஸ்பெஷல்: நாய்களுக்கென தனி வழிபாடு

நேபாளில் Tihar என்ற பெயரில் 5 நாள்கள் தீபாவளி கொண்டாடப்படுகின்றது. இப்பண்டிகையின் 2-வது நாளில் நாய்கள் வழிபாடு நடத்தப்படுகிறது. மனிதர்களுக்கு விசுவாசமாக இருக்கும் நாய்களிடம் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் விதமாக, வளர்ப்பு மற்றும் தெரு நாய்களுக்கு மாலை அணிவித்து, நெற்றியில் திலகம் இட்டு வழிபாடு நடத்தப்படுகின்றன. மேலும், இந்த நாளில் நாய்களுக்கு சிறப்பு உணவுகளும் வழங்கப்படுகின்றன.
News October 15, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.