News April 16, 2024
கர்நாடக இசைக்கலைஞர் கே.ஜி.ஜெயன் காலமானார்

பிரபல கர்நாடக இசைக்கலைஞரும், மலையாள நடிகர் மனோஜின் தந்தையுமான கே.ஜி.ஜெயன் (89) உடல் நலக்குறைவால் இன்று காலமானார். சபரிமலை கோவிலில் தினமும் நடை திறக்கப்படும்போது இவர் பாடிய ‘ஸ்ரீகோவில் நடை துறன்னு’ பாடல் ஒலிக்கப்படுவது வழக்கம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களை பாடியுள்ள இவர், ஒரு சில மலையாளப் படத்திற்கும் இசையமைத்துள்ளார். இவரது மறைவிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News November 15, 2025
தமிழகத்திற்கு நெருக்கமான யூடியூபர் தோல்வி

யூடியூபில் 96 லட்சம் ஃபாலோயர்களை கொண்ட பிஹார் யூடியூபர் மனிஷ் காஷ்யப், 50,366 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஜன்சுராஜ் கட்சி சார்பில் சான்பாடியா தொகுதியில் போட்டியிட்ட அவர், 37,000 வாக்குகளை பெற்று 3-ம் இடம் பிடித்துள்ளார். இவர், தமிழ்நாட்டில் பிஹாரிகள் அடித்து கொல்லப்படுவதாக வீடியோ வெளியிட்டு, பின்னர் தமிழக போலீசால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News November 15, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல் ▶குறள் எண்: 520 ▶குறள்: நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு. ▶பொருள்: மேல் பதவியில் இருப்பவன் தவறு செய்யாவிட்டால் மக்களும் தவற செய்யார். அதனால் பதவியில் இருப்பவரை நாளும் கவனித்து நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
News November 15, 2025
பிஹார் தாக்கம்: பங்குச்சந்தை நிலவரம் என்ன?

பிஹார் வாக்கு எண்ணிக்கை காரணமாக இந்திய பங்குச்சந்தைகள், வார இறுதிநாளான நேற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டன. இருப்பினும், வர்த்தக நேர முடிவில் சற்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. அதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 84.11 புள்ளிகள் உயர்ந்து 84563 புள்ளிகளுடன் நிறைவு செய்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 31 புள்ளிகள் உயர்ந்து 25,910 புள்ளிகளுடன் நிறைவு செய்தது.


