News October 14, 2025
பைக்/ காரில் டேங்க் ஃபுல் பண்ற பழக்கம் இருக்கா.. உஷார்!

டேங்க் ஃபுல் செய்வதால் வண்டியே வெடிக்கலாம் என்பது தெரியுமா? டேங்கில் ‘Cut off level’ என்பது இருக்கும். அதுவரை மட்டுமே எரிபொருள் நிரப்பணும். டேங்கை மூடிய பிறகு, வெப்பநிலை அதிகரிப்பதால், எரிபொருள் விரிவடையும். அதற்காக ‘Cut off level’ கொடுக்கப்படுகிறது. டேங்க் நிரம்பி இருந்தால், எரிபொருள் வழிந்து Evaporating சிஸ்டமில் பிரச்னை உருவாகி, Spark வந்தால், வண்டி வெடிக்கும் சூழலும் ஏற்படலாம். கவனமா இருங்க!
Similar News
News October 14, 2025
முதலீடுகளை ஈர்ப்பதில் ஏமாற்றும் திமுக: அன்புமணி

முதலீடுகளை ஈர்க்கும் விஷயத்தில் தொடர்ந்து பொய்யான தகவல்களை தமிழக அரசு வழங்கி வருவதாக அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். ஃபாக்ஸ்கான் நிறுவனம் மூலம் ₹15,000 கோடி முதலீடு கிடைத்துள்ளதாக தமிழக அரசு கூறும் நிலையில், அதனை ஃபாக்ஸ்கான் நிறுவனம் மறுத்துள்ளதாக அன்புமணி குறிப்பிட்டுள்ளார். அதனால் திமுக ஆட்சியில் பெறப்பட்ட தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
News October 14, 2025
வங்கி கடன்.. வந்தது HAPPY NEWS

ஓராண்டில் மட்டும் ரெப்போ வட்டி விகிதம் 1% வரை குறைந்ததால், கடன் வட்டி விகிதங்களை வங்கிகள் குறைத்து வருகின்றன. குறிப்பாக, இந்த மாதத்தில் பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் வங்கி, IDBI வங்கி உள்ளிட்டவை கடனுக்கான MCLR விகிதங்களை 0.05% வரை குறைத்துள்ளன. அதனால், அந்த வங்கிகளில் வீடு, வாகன கடன் பெற்றவர்களின் EMI குறைந்துள்ளது. இது சிறிய தொகை என்றாலும், நீண்ட கால கடன் பெற்றவர்களுக்கு பலனாக அமையும். SHARE IT.
News October 14, 2025
இணையத்தில் கசிந்த யாஷ் படக்காட்சிகள்

யாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்ஷிக்’ படம் அடுத்த ஆண்டு மார்ச் 19-ல் வெளியாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் மும்பை, பெங்களூரு போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே படத்தில் யாஷ் நடித்த ஒரு காட்சி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இணையத்தில் கசிந்த இந்த வீடியோவை பார்த்த படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.