News October 14, 2025
மிக மோசமான நிலையில் உயர்கல்வி

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் போதிய பேராசிரியர்கள் இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 10,500 பணியிடங்களில் 9 ஆயிரத்திற்கும் மேல் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதாகவும், வெறும் ஆயிரம் நிரந்தர பேராசிரியர்களை கொண்டு கல்லூரிகள் இயங்குவதாகவும் கூறப்படுகிறது. முதல்வரே இல்லாமல் 100 கல்லூரிகள் செயல்படுவதாகவும், இதனால், உயர்கல்வி மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
Similar News
News October 14, 2025
சற்றுமுன்: விலை மளமளவென குறைந்தது

தீபாவளிக்கு ஆம்னி பஸ்களின் கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்ததால் மக்கள் அவதியடைந்தனர். இந்நிலையில், ஆம்னி பஸ் உரிமையாளர்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதனையடுத்து, டிக்கெட் விலை கணிசமாக குறைந்துள்ளது. சென்னை – நெல்லை செல்ல முன்பு ₹5,000 வரை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது ₹3,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. பிற ஊர்களுக்கான டிக்கெட் விலையும் குறைந்துள்ளது. SHARE IT.
News October 14, 2025
சரியா தூங்கலைனா இந்த பிரச்னை வருமா?

இரவில் போதிய நேரம் தூங்காமல் இருந்தால் அடுத்த நாள் முழுக்க நமக்கு சோர்வாகவே இருக்கும். ஆனால் இந்தப் பழக்கம் நாள்படும்போது, ஏராளமான மனநல பிரச்னைகள்கூட வரக்கூடும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் ரத்த அழுத்த உயர்வு, நீரிழிவு பாதிப்புகள், படபடப்பு, ஞாபக மறதி போன்ற பிரச்னைகள் ஏற்படுமாம். தூக்க பற்றாக்குறையால் மனநிலை மாற்றங்கள் அதிகரிப்பது, அடிக்கடி எமோஷனலாவது போன்றவையும் ஏற்படலாம்.
News October 14, 2025
கரூர் வழக்கு: ஆவணங்களை ஒப்படைத்தது SIT

கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் சிபிஐ-க்கு மாற்றி நேற்று உத்தரவிட்டது. அத்துடன், சிபிஐக்கு வழக்கை மாற்றியதால், சிறப்பு புலனாய்வு குழுவுக்கு (SIT) இடைக்கால தடைவிதித்தது. இதனால் SIT குழுவினர் இந்த விவகாரம் தொடர்பான ஆவணங்கள், வாக்குமூலங்களை கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இந்த ஆவணங்கள் உடனடியாக சிபிஐ-யிடம் வழங்கப்படும்.