News October 14, 2025
தேனி: மது போதையால் ஒருவர் பரிதாப பலி

கேரளா, இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் பீட்டர் (51). இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கம்பம் வந்த நிலை அங்கு மது குடித்துள்ளார். கம்பம் பகுதியில் மது போதையில் நடந்து சென்றவர் தவறி சாக்கடையில் விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்து நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனில் உயிரிழந்தார். இது குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்கு (அக்.13) பதிவு செய்து விசாரணை
Similar News
News October 14, 2025
தேனி: அடுத்த 7 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தேனியில் இன்று (அக் 14) முதல் அக். 20 (திங்கள் கிழமை) வரை 7 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.
News October 14, 2025
தேனியில் பட்டாசு விற்போர் கவனத்திற்கு

தீபாவளி பண்டிகை சில நாட்களில் கொண்டாடப்படவுள்ள நிலையில் பட்டாசு கடை உரிமையாளர்கள் உரிமம் பெற்ற இடத்தில் மட்டும் பட்டாசு விற்பனை செய்ய வேண்டும். போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும். சட்டவிரோத பட்டாசுகளை விற்பனை செய்ய கூடாது. அதிக ஒளி, ஒலி எழுப்பக்கூடிய வகையிலான பட்டாசுகள் விற்க கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
News October 14, 2025
தேனி: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

தேனி மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <