News April 16, 2024
அண்ணாமலை ஒரு காலி பெருங்காய டப்பா

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒரு காலி பெருங்காய டப்பா என்று அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், பாஜகவுக்கு ரெடிமேட் துணியை போல ரெடிமேட் தலைவராக அண்ணாமலை வந்தார் என்றும், அவரிடம் ஆளுமை பண்பு கிடையாது என்றும் தெரிவித்தார். அண்ணாமலை காலி பெருங்காய டப்பா, அதில் வாசம் மட்டும்தான் வரும், எந்தவித பலனும் இருக்காது என்றும் உதயகுமார் கூறினார்.
Similar News
News November 15, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துவினையாடல் ▶குறள் எண்: 520 ▶குறள்: நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு. ▶பொருள்: மேல் பதவியில் இருப்பவன் தவறு செய்யாவிட்டால் மக்களும் தவற செய்யார். அதனால் பதவியில் இருப்பவரை நாளும் கவனித்து நிர்வாகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
News November 15, 2025
பிஹார் தாக்கம்: பங்குச்சந்தை நிலவரம் என்ன?

பிஹார் வாக்கு எண்ணிக்கை காரணமாக இந்திய பங்குச்சந்தைகள், வார இறுதிநாளான நேற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டன. இருப்பினும், வர்த்தக நேர முடிவில் சற்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. அதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 84.11 புள்ளிகள் உயர்ந்து 84563 புள்ளிகளுடன் நிறைவு செய்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 31 புள்ளிகள் உயர்ந்து 25,910 புள்ளிகளுடன் நிறைவு செய்தது.
News November 15, 2025
தொண்டர்கள் சோர்வடைய வேண்டாம்: கார்கே

பிஹார் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக CONG தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இந்த தோல்வியை கண்டு CONG தொண்டர்கள் சோர்வடைய வேண்டாம். தைரியம், அர்ப்பணிப்புடன் நீண்ட கால போராட்டத்திற்கு நாம் தயாராக வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், தங்களுக்கு வாக்களித்த பிஹார் மக்களுக்கு இதயபூர்வமான நன்றி, ஜனநாயகத்தை காப்பதற்கான தங்களது பயணம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.


