News October 14, 2025

நாமக்கல்: பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கவனத்திற்கு!

image

நாமக்கல் அரசு ஆண்கள் (தெற்கு) மேல்நிலை பள்ளியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெறுகிறது. அதன்படி, அக்.14ந் தேதி அரசு/தனியார் பள்ளி 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கும், அக்.15ந் தேதி அரசு/தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் காலை 09.30 மணியளவில் போட்டிகள் நடைபெறுகிறது. போட்டி தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 04286292164 என்ற எண்ணைத் தொடர்புக் கொள்ளவும்.

Similar News

News October 14, 2025

நாமக்கல் இளைஞர்களின் கவனத்திற்கு!

image

நாமக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் உதவித்தொகை பெற்று வரும் இளைஞர்கள் தொடர்ந்து உதவித்தொகையை பெற சுய உறுதிமொழி ஆவணம் ஆண்டுதோறும் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி இதுவரை சுய உறுதிமொழி ஆவணம் கொடுக்காத நபர்கள், உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சுய உறுதிமொழி ஆவணத்தினை சமர்ப்பிக்கும்படி ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

News October 14, 2025

நாமக்கல்: தீபாவளிக்கு இலவச வேட்டி, சேலை!

image

நாமக்கல் மாவட்டத்தில் முதியோர் (ம) ஓய்வூதிய உதவித்தொகை குடும்ப அட்டைதார்களுக்கு கூட்டுறவுத்துறையின் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்பட உள்ளதாக எம்.பி ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார். எனவே, உங்கள் பகுதியில் இலவச வேட்டி, சேலை வழங்கும் தேதி குறித்து தெரிந்து கொள்ள அந்தந்த பகுதியை சேர்ந்த நியாய விலைக்கடைகளை அணுகவும்.

News October 14, 2025

திருச்செங்கோடு: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

image

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பரில் வடமாநில ஏடிஎம் கொள்ளையர்களை சினிமா பாணியில் சேஸ் செய்து போலீசார் பிடித்தனர். இந்நிலையில், சம்பவத்தின் போது கைதிகளில் ஒருவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட நிலையில், வழக்கில் பிடிபட்ட இருவருக்கு தலா
12 ஆண்டுகள் சிறை தண்டனையும் எஞ்சிய 4 பேருக்கு தலா 24 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து திருச்செங்கோடு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

error: Content is protected !!