News October 14, 2025

சென்னையில் 3 லட்சம் பேருக்கு நோட்டிஸ்

image

சென்னை மாநகராட்சியில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான அரையாண்டு சொத்துவரியை செலுத்தாத சுமார் 3 லட்சம் பேருக்கு மாநகராட்சி நோட்டிஸ் அனுப்பி உள்ளது. கடந்த மார்ச் முதல் செப்டம்பர் வரை அரையாண்டுக்கான சொத்து வரி ரூ.1.002 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டைக்காட்டிலும் ரூ.122 கோடி அதிகம் இருப்பினும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் அரையாண்டு சொத்து வரி செலுத்தாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 14, 2025

சென்னை: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

சென்னை மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News October 14, 2025

சென்னை மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லையா?

image

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் அல்லது உங்க மாவட்ட சுகாதார அலுவலகத்தில் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 14, 2025

சென்னை: ரயில்வேயில் நிரந்தர வேலை; இன்றே கடைசி!

image

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இங்க கிளிக் <<>>செய்து இன்று அக்.14க்குள் விண்ணப்பிக்கவும். சந்தேகம் இருப்பின்: 9592001188 என்ற எண்ணை அழைக்கலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!