News October 14, 2025
BREAKING: தீபாவளி விடுமுறை.. அரசு புதிய அறிவிப்பு

தீபாவளி விடுமுறையையொட்டி சில ஆம்னி <<17980771>>பஸ்களில் கட்டணம் 4 மடங்கு<<>> உயர்ந்துள்ளது. இதனிடையே, ஆம்னி பஸ்களை கண்காணிக்க 13 பேர் கொண்ட குழுவை TN அரசு அறிவித்துள்ளது. போக்குவரத்து அதிகாரிகள் கொண்ட இக்குழு சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், ஓசூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆம்னி பஸ்களின் கட்டணம், ஆவணங்களை அக்.21 வரை கண்காணிக்கும் என அரசு தெரிவித்துள்ளது. இதனால், கட்டணம் உயர்வை தவிர்க்க வாய்ப்புள்ளது.
Similar News
News October 14, 2025
வீட்டு வாசலை அலங்கரிக்கும் தீபாவளி கோலங்கள்

தீபாவளி என்றால் பட்டாசு, புத்தாடை, பலகாரங்களோடு வாசலில் போடும் அழகான கோலங்களும் அப்பண்டிகையின் சிறப்பாகும். தீபாவளியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் என்ன கோலம் போட்டிருக்கு என்று பார்ப்பதே பலருக்கும் பிடித்த ஒரு விஷயம். அப்படி வீட்டு வாசலை அலங்கரிக்கும் அழகான கோலங்கள் உங்களுக்காக… SWIPE செய்து பாருங்க…
News October 14, 2025
உங்க வாகனத்துக்கு தவறாக அபராதம் போட்டுருக்கா?

உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதை எப்படி ரத்து செய்ய வேண்டும் என தெரியுமா?. அதற்கு நீங்கள் https://echallan.parivahan.gov.in/gsticket/search இணையத்தில் சென்று உங்கள் பெயர், மொபைல் எண், சலான் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு, தவறான அபராதம் என்பதற்கான ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும். பின்னர் உங்கள் புகார் சோதனை செய்யப்பட்டு சலான் ரத்து செய்யப்படும். SHARE IT
News October 14, 2025
இளையராஜா அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலகத்திற்கு வந்த மின்னஞ்சலின் அடிப்படையில் போலீசார் சோதனை நடத்தினர். பின்பு வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது. CM ஸ்டாலின், விஜய், அஜித் உள்ளிட்ட பல பிரபலங்களின் வீடுகளுக்கு ஏற்கெனவே மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.