News October 14, 2025
விழுப்புரத்தில் இனி யாரும் தப்ப முடியாது!

விழுப்புரத்தில் காவல்துறை சார்பில், 200 இடங்களில் கண்காணிப்பு கேமராவுடன் தனி கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிக்கும் திட்டப்பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. விழுப்புரம் நகரில் நேருஜி சாலை, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டது. இதனையடுத்து, சென்னை சாலை, மாம்பழப்பட்டு சாலை பகுதிகளில் முக்கிய இடங்களில் கேமராக்கள் பொறுத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
Similar News
News October 14, 2025
விழுப்புரம்: ரூ.35,400 சம்பளத்தில் அரசு வேலை அறிவிப்பு!

விழுப்புரம் மக்களே மத்திய ஆயுதக் காவல் படையில் காலியாக உள்ள 2,861 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News October 14, 2025
விழுப்புரத்திற்கு மஞ்சள் அலெர்ட்!

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய கடலோரப் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டத்திலும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் வானிலை எப்படி உள்ளது என கமெண்ட் பண்ணுங்க.
News October 14, 2025
விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த மழையளவு!

விழுப்புரம் மாவட்ட மழை அளவு நிலவரம் (14.10.25 )அளவு மில்லி மீட்டரில்; செம்மேடு 105 மி.மீ, விழுப்புரம் 56 மி.மீ, அவலூர்பேட்டை 47 மி.மீ, வானூர் 39 மி.மீ,
கோலியனூர் 27 மி.மீ, வளத்தி 26 மி.மீ, வளவனூர் 25 மி.மீ, மானம்பூண்டி 23 மி.மீ,
திருவெண்ணெய்நல்லூர் 22 மி.மீ, ஆனந்தபுரம் 15.6 மி.மீ,
செஞ்சி 12 மி.மீ, முகையூர் 10 மி.மீ, அரசூர் 8 மி.மீ, கெடார் 3 மி.மீ, முண்டியம்பாக்கம் 3 மி.மீ, மழை பதிவாகியுள்ளது.