News October 14, 2025

திண்டுக்கல் ஆட்சியருக்கு பறந்த அதிரடி உத்தரவு

image

துப்பாக்கி உரிமம் புதுப்பிக்க மறுத்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்துள்ளது.மகுடபதி என்பவர் தாக்கல் செய்த மனுவில்,அவர் மீது மோட்டார் விபத்து வழக்கு மட்டுமே இருப்பதாகவும், இது பொது பாதுகாப்பிற்கு ஆபத்தாகாதது என நீதிபதி குறிப்பிட்டார். துப்பாக்கி உரிமையை தவறாக பயன்படுத்திய ஆதாரம் இல்லையென குறிப்பிட்டு, லைசென்ஸ் புதுப்பிக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உத்தரவு

Similar News

News October 14, 2025

நத்தம்: கோயிலில் அம்மன் நகை திருட்டு!

image

நத்தம்: கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் கோயிலில் தினமும் காலை, மாலை  நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி மாலை வழக்கம்போல் கோயில் திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. இந்நிலையில், மறுநாள் காலை கோவிலை திறந்த போது செண்பகவல்லி அம்மன் கழுத்தில் இருந்த தாலி திருடு போயிருந்தது. இது குறித்த புகாரில் நத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News October 14, 2025

திண்டுக்கல்: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் – சூப்பர் ஆஃபர்!

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க!

News October 14, 2025

விவசாயிகளுக்கு அடையாள அட்டை அவசியம்!

image

மத்திய அரசு வழங்கும் ரூ.2 ஆயிரம் உதவித் தொகையைப் பெற தனித்துவ விவசாய அடையாள அட்டை அவசியம் என வேளாண்மை இணை இயக்குநர் அ.பாண்டியன் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் 75 ஆயிரம் விவசாயிகளில் 16,539 பேர் இதுவரை அட்டை பெறவில்லை. அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் தொடக்கத்தில் வழங்கப்படும் 21வது தவணைத் தொகை பெற, ஆதார், கைப்பேசி எண், சிட்டா நகலுடன் உடனே அட்டை பெற வேண்டும் என கூறினார்.

error: Content is protected !!