News October 14, 2025

திருப்பரங்குன்றத்தில் தங்கரத புறப்பாடு ரத்து

image

திருப்பரங்குன்றத்தில் நடைபெற இருக்கும் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்குள் தங்கி விரதம் இருப்பார்கள். அவர்களுக்கு தினமும் திணை மாவு, எலுமிச்சை சாறு, பால் ஆகியவை வழங்கப்படும். மேலும் பக்தர்கள் கோயிலுக்குள் தங்கியிருப்பதால் அக்டோபர் 22 முதல் 28 வரை கோவிலில் தங்கரத புறப்பாடு ரத்து செய்யப்பட்டும் என திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Similar News

News October 14, 2025

மதுரையில் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

image

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மதுரை, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தேனியில் இன்று (அக்.14) முதல் அக். 20 வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

News October 14, 2025

மேலூர் அருகே மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி பலி

image

மதுரை மாவட்டம் மேலுார் அருகே கருத்தபுளியம்பட்டியைச் சேர்ந்த அர்ஜுன் (21) என்பவர், கல்லம்பட்டியில் வீட்டு வேலை செய்யும் போது, மின்சார வயரில் கம்பி அறுந்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று (அக். 13) மதியம் நிகழ்ந்தது. மேலுார் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 14, 2025

மதுரையில் வீட்டிற்குள் அழுகிய நிலையில் சடலம் மீட்பு

image

மதுரை கீழவெளிவீதி சாயப்பட்டறை கூலித் தொழிலாளி பழனி 60 வண்டியூர் பகுதியில் வசித்து வந்தார். சில நாட்களாக அவர் வேலைக்கு வராததால் சாயப்பட்டறை தொழிலாளர்கள் நேற்று அவர் வீட்டிற்கு சென்றனர். வீட்டிற்குள் துர்நாற்றம் வீசியதால் வண்டியூர் விஏஓவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது புகாரின் பேரில் போலீசார் வீட்டின் கதையை உடைத்து பார்த்த போது பழனி அழுகிய நிலையில் இறந்து கிடந்தார் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!