News October 14, 2025

ஈரோடு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

ஈரோடு மாவட்டத்தில், நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள், காப்பீட்டுத் தொகைகள், பங்கு தொகைகள் ஆகியவற்றை அவற்றின் உரிமையாளர்கள் அல்லது சட்ட வாரிசுகளுக்கு ஒப்படைக்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை (அக் 15) நாளை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தெரிவித்தார். உரிய அடையாள ஆவணங்கள் மற்றும் சான்றுகளுடன் பங்கேற்று பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவித்தார்.

Similar News

News October 14, 2025

ஈரோட்டில் வெளுக்கப்போகும் மழை!

image

தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று, ஈரோடு மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

News October 14, 2025

ஈரோடு: 100 % மானியம் வழங்கும் திட்டம் APPLY NOW!

image

ஈரோடு: நுண்ணீர் பாசன அமைப்பு நிறுவ சிறு/குறு விவசாயிகளுக்கு 100 % மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 % மானியமும் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக சிறு/குறு விவசாயிகள் 2 எக்டரும், பெரிய விவசாயிகள் 5 எக்டரும் வரை பயன்பெறலாம். ஆர்வமுள்ள விவசாயிகள் ஆதார்,குடும்ப அட்டை, பட்டா, பயிர் அடங்கல், சிறு / குறு விவசாயி சான்று, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களை வைத்து இந்த லிங்க் <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். SHAREIT பண்ணுங்க.!

News October 14, 2025

ஈரோடு மாவட்டத்தின் தனி சிறப்புகள்

image

* தமிழ்நாட்டில் மஞ்சள் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது,
* இங்கு கைத்தறி துணி உற்பத்தி பிரபலம்,
* வரலாற்றுச் சிறப்பாக சோழர், பாண்டியர், கங்கர், போசாளர் போன்ற அரசமரபினர் ஆட்சி செய்துள்ளனர்.
* சுற்றுலாத் தலங்களாக பவானி கூடுதுறை, சங்கமேஸ்வரர் கோயில், கொடிவேரி அணை, பண்ணாரி அம்மன் கோயில், சென்னிமலை முருகன் கோயில், பவானிசாகர் அணை என பல சிறப்புக்கள் உள்ளது. உங்களுக்கு தெரிந்த சிறப்புகளை கமெண்ட் பண்ணுங்க.

error: Content is protected !!