News October 14, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய தொழிற்பிரிவு துவக்கம்!

கோவை மாவட்டத்தில் உள்ள ஐடிஐகளில் 2025 ஆம் ஆண்டிற்கான புதிய தொழிற்பிரிவு துவங்கப்பட்டது. அதன்படி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஸ்மார்ட் போன் டெக்னீசியன் மற்றும் ஆப் டெஸ்டர் என்ற தொழிற்பிரிவு துவங்கப்பட்டுள்ளது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சேர்க்கை நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கோவை கலெக்டர் பவன் குமார் அறிவுறுத்தி உள்ளார்.
Similar News
News October 14, 2025
கோவையில் வெளுக்கப்போகும் மழை!

தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில், கோவை மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று, கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டியுள்ள பகுதிகளில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
News October 14, 2025
கோவை: பட்டாவில் மாற்றமா? ஒரு கிளிக் போதும்

பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க, பட்டா/சிட்டா விவரங்களை தெரிந்துகொள்ள மிகவும் எளிமையாக்க எங்கும் செல்லவேண்டாம். தமிழ்நாடு அரசு இணையதளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நீங்கள் அமர்ந்த இடத்திலேயே <
News October 14, 2025
கோவையில் ரேபிஸ் நோய் சிறுவன் பலி

மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 15 வயது சிறுவனை ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட வெறிநாய் கடித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுவன் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் கடந்த 9 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடல் நிலை மோசமானதை தொடர்ந்து கோவை ஜிஎச் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.