News October 14, 2025

BREAKING: சீமான் வீட்டில் பரபரப்பு

image

சென்னை, நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. DGP அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் இந்த மிரட்டல் வந்ததை அடுத்து, சீமான் வீட்டில் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வருவதால், பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அண்மையில், CM ஸ்டாலின், EPS, விஜய் உள்ளிட்டோர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News October 14, 2025

இராம்நாடு 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

image

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தேனியில் இன்று (அக் 14) முதல் அக்.18ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

News October 14, 2025

கேரள ATM கொள்ளை கும்பல்: 10 ஆண்டு சிறை

image

கடந்த ஆண்டு கேரள ATM கொள்ளை கும்பலை நாமக்கல் போலீசார் சேஸ் செய்து பிடித்த விதம் சினிமாவை மிஞ்சும் காட்சியாக இருந்தது. அப்போது தப்ப முயன்ற நபரை போலீசார் என்கவுண்டரும் செய்திருந்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இருவருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்செங்கோடு கோர்ட் உத்தரவிட்டது. மேலும் 3 பேருக்கு 5 ஆண்டுகள் சிறையும், 6-வது குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறையும் விதிக்கப்பட்டுள்ளது.

News October 14, 2025

உயிருக்கு ஆபத்து.. விஜய்யிடம் உதவி கேட்கும் பிரபாகரன்

image

கரூர் கூட்டநெரிசல் வழக்கில் CBI விசாரணை கோரிய பிரபாகரன், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த விஷயத்தில் விஜய் தனக்கும், தனது தாய்க்கும் பாதுகாப்பு பெற்று தர வேண்டும் என்றும், தனது தங்கையின் மரணத்திற்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். வழக்கு தொடுத்தவர்களில் ஒருவரான பிரபாகரன் உயிருக்கு அச்சுறுத்தல் என கூறியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!