News October 14, 2025

Recipe: காஜு கத்லி செய்யலாம் வாங்க!

image

*முந்திரி பருப்பை 6 மணிநேரம் நீரில் ஊறவைத்து, நைஸாக அரைக்கவும் *வாணலியில் நெய்விட்டு, முந்திரி மாவை கொட்டி நன்கு கிளறவும் (நிறம் மாறக்கூடாது) *அதில், குங்குமப்பூ, ஏலக்காய் பொடி, சர்க்கரை பாகு சேர்க்கவும் *சப்பாத்தி மாவு பதத்திற்கு இந்த கலவை வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கிவிடவும் *ஆறியவுடன் டைமண்ட் வடிவில் அதை துண்டுகளாக வெட்டினால் சுவையான காஜு கத்லி ரெடி. SHARE IT.

Similar News

News October 14, 2025

கேரள ATM கொள்ளை கும்பல்: 10 ஆண்டு சிறை

image

கடந்த ஆண்டு கேரள ATM கொள்ளை கும்பலை நாமக்கல் போலீசார் சேஸ் செய்து பிடித்த விதம் சினிமாவை மிஞ்சும் காட்சியாக இருந்தது. அப்போது தப்ப முயன்ற நபரை போலீசார் என்கவுண்டரும் செய்திருந்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இருவருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்செங்கோடு கோர்ட் உத்தரவிட்டது. மேலும் 3 பேருக்கு 5 ஆண்டுகள் சிறையும், 6-வது குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறையும் விதிக்கப்பட்டுள்ளது.

News October 14, 2025

உயிருக்கு ஆபத்து.. விஜய்யிடம் உதவி கேட்கும் பிரபாகரன்

image

கரூர் கூட்டநெரிசல் வழக்கில் CBI விசாரணை கோரிய பிரபாகரன், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த விஷயத்தில் விஜய் தனக்கும், தனது தாய்க்கும் பாதுகாப்பு பெற்று தர வேண்டும் என்றும், தனது தங்கையின் மரணத்திற்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். வழக்கு தொடுத்தவர்களில் ஒருவரான பிரபாகரன் உயிருக்கு அச்சுறுத்தல் என கூறியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News October 14, 2025

தீபாவளிக்கு 5 நாள்கள் விடுமுறை.. ஏன் தெரியுமா?

image

வடமாநிலங்களில் தீபாவளி பண்டிகை 5 நாள்கள் கோலாகலமாக கொண்டாடப்படுவதால், அங்கு 4-5 நாள்கள் தொடர் விடுமுறை அளிக்கப்படுகிறது. நாம் அதிகபட்சம் 2 நாளில் தீபாவளி கொண்டாட்டத்தை முடித்து விடுகிறோம். ஆனால், வடமாநிலங்களில் அப்படி என்ன வித்தியாசமாக தீபாவளி கொண்டாடுகிறார்கள்? மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து பாருங்க.

error: Content is protected !!