News October 14, 2025
போனை இப்படி நோண்டிட்டு இருக்கீங்களா.. உஷார்!

மேலே உள்ள படத்தில் இருப்பதை போல, போனை யூஸ் செய்வோரை பார்த்திருப்போம். ஆனால், இது எவ்வளவு டேஞ்சர் என உங்களுக்கு தெரியுமா? இப்படி கழுத்தை சாய்த்தபடி போனை நோண்டி கொண்டே இருந்ததால், ஜப்பானின் 25 வயது இளைஞர் ஒருவர் ‘Drop Head Syndrome’ என்ற பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரால் தற்போது தலையை நேராகவே வைக்க முடியாவில்லையாம். வருங்காலத்தில் இது பெரிய பிரச்னையாக மாறலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
Similar News
News October 14, 2025
பிஹாரை RJD இழந்தது எப்படி?

பிஹாரில் RJD தலைமையில் ஆட்சி அமைந்து 2 தசாப்தங்கள் ஆகின்றன. 90-களில் ஓபிசி எழுச்சி (மண்டல்), பாஜக எதிர்ப்பு(மந்திர்) மூலம் லாலு, ஓபிசி, முஸ்லிம் மக்களின் ஏகோபித்த தலைவரானார். யாதவர் லாபியும், நிதிஷ் EXIT-ம் லாலுவை MY(Muslim, Yadav) தலைவராக சுருக்கின. Jungle Raj அவப்பெயர், நிதிஷ்(EBC+Maha Dalit), பாஜக(FC+Brahmins) கூட்டணி போன்றவை RJD-யின் MY ஃபார்முலாவை விஞ்சியுள்ளன. 2026-ல் மாற்றம் ஏற்படுமா?
News October 14, 2025
உருவக்கேலிக்கு பிரதீப் கொடுத்த நச் பதில்

இயக்குநராக கோமாளியில் அசத்திய பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே மற்றும் டிராகன் வெற்றியால் கவனிக்கத்தக்க நடிகராகவும் மாறினார். ஆனால் அவரது உருவத்தை வைத்து கேலி செய்யும் ஒரு கூட்டம், இவரெல்லாம் ஹீரோவா என விமர்சிக்கவும் செய்கின்றனர். இந்நிலையில், உருவக்கேலி செய்வது எல்லாம் தன்னை பெரிதாக பாதிக்காது என்றும், மக்களின் அன்பு இருக்கும் போது வேறு எதை பற்றியும் யோசிக்க தேவையில்லை எனவும் பிரதீப் கூறியுள்ளார்.
News October 14, 2025
Google Maps-க்கு சவால் விடும் ‘MapmyIndia’

‘அரட்டை App’ உலகளவில் கவனிக்கப்பட்டுள்ள நிலையில், அதே போல தற்போது ‘MapmyIndia’ என்ற App-க்கும் வரவேற்பு கூடியுள்ளது. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்வின் பதிவை தொடர்ந்து, இந்தியர்களின் கவனத்தை பெற்ற இந்த App, 3.5 கோடி டவுன்லோட்களை பெற்றுள்ளது. 1995-ல் ராகேஷ் & ரஷ்மி வர்மா என்ற இந்தியர்கள் உருவாக்கிய இந்த App-ல் துல்லியமான Map-களும், மேடுகள் பள்ளங்கள் குறித்து எச்சரிக்கைகளும் இடம் பெற்றுள்ளன.