News October 14, 2025

திருச்சி: 2 குழந்தைகளின் தாய் மர்ம சாவு

image

சோமரசம்பேட்டையை சேர்ந்த சங்கர்-மனோன்மணி (30) தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மனோன்மணி நேற்று தனது தாயார் ரோகிணிக்கு போன் செய்து தன் மாமனார், மாமியார் இருவரும் பிரச்சனையில் ஈடுபடுவதாக கூறியுள்ளார். இதையடுத்து ரோகிணி தனது மகளை காண சென்றபோது, அவர் தூக்கிட்டு தற்கொலை கொண்டதாக சங்கர் வீட்டார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சந்தேக மரணம் என வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News October 14, 2025

திருச்சி: பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து சிறுமி பலி

image

திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே தில்லாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் நேற்று புதிதாக வாங்கிய ஆட்டோவில் தனது மகள் கிரேசிக்காவை (10) அழைத்துக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தார். அப்போது சாலையோர பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ராஜ்குமார் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News October 14, 2025

திருச்சி: ரயில் முன் பாய்ந்து தற்கொலை

image

வையம்பட்டி அடுத்த தண்டல்காரனூர் அருகே நேற்று இரவு இடையபட்டியைச் சேர்ந்த கஸ்தூரி ராஜா என்ற இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன் கேம் மூலமாக ஏற்பட்ட பண இழப்பின் காரணமாகவே தான் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் அவர் வாட்ஸ்அப்பில் பகிர்ந்துள்ளார். அதன் அடிப்படையில் ரயில்வே போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News October 14, 2025

திருச்சி: புகையிலையின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு முகாம்

image

திருச்சி மாவட்டத்தில், “புகையிலை இல்லா இளைய சமுதாயம்” என்ற தலைப்பிலான விழிப்புணர்வு முகாம் கடந்த 9-ம் தேதி தொடங்கி டிச.8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் புகையிலையின் தீமைகள் குறித்து ஒவ்வொரு கிராமத்திலும் வாரத்தில் ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. மேலும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வாரம் இருமுறை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!