News October 14, 2025

நாகை: தந்தையை கொலை செய்த மகன் கைது

image

நாகூர் அடுத்த வெங்கிடங்கால் பகுதியை சேர்ந்தவர் சேகர். நெடுஞ்சாலை துறையில் பணியாற்றி வந்த சேகருக்கும் அவரது மகன் வெங்கடேஷுக்கும் இடையே நேற்று கடும் இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேஷ், தனது தந்தை சேகரை கட்டையால் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் அவர் பரிதபமாக உயிரிழந்தார். இதையடுத்து புகாரின் பேரில் நாகூர் போலீசார் வெங்கடேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News October 14, 2025

நாகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின இனத்தை சேர்ந்த மாணவர்கள் வெளிநாட்டு பல்கலைகழகங்களில் உயர்கல்வி பயில கல்வி கடன் வழங்கப்பட உள்ளது. எனவே விருப்பமுள்ள மாணவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலரை அணுகி பயன்பெறலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News October 14, 2025

நாகை: தயார் நிலையில் 2500 மணல் மூட்டைகள்!

image

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருக்குவளை உட்கோட்டத்தில் நாகை கோட்டப்பொறியாளர் ராஜேஷ்கண்ணா அறிவுறுத்தலின் பேரில், 2,500 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. உதவிக் கோட்டப் பொறியாளர் அய்யாதுரை, உதவிப்பொறியாளர் உமாமகேஸ்வரி தலைமையில் சாலை ஆய்வாளர்கள், பணியாளர்கள் இணைந்து பருவ மழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

News October 14, 2025

நாகை: போஸ்ட் ஆபீஸ் வங்கியில் வேலை

image

இந்திய அஞ்சல் வங்கியில் (IPPB) Executive காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.30,000
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4. வயது வரம்பு: 20-35
5. பணியிடம்: தமிழ்நாடு
6. கடைசி தேதி: 29.10.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK <<>>செய்க. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!