News October 14, 2025
கடலூர்: 4 போலீசார் அதிரடி இடமாற்றம்

கடலூரில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு உடந்தையாக இருந்த கடலூர் துறைமுகம் காவல் நிலைய போலீசார் காங்கேயன், கம்மாபுரம் காவல் நிலைய காவலர் மணிகண்டன், நடுவீரப்பட்டு காவல் நிலைய காவலர் தீனதயாளன், கடலூர் புதுநகர் காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் முத்துக்குமாரன் ஆகியோரை அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News October 14, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில், பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்துக்காக, சிறப்பாக பங்காற்றிய 13-18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் மாநில அரசின் சார்பில், விருது மற்றும் ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டு வருகிறது. விருதுக்கு விண்ணப்பிக்க http://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் நவ. 29-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News October 14, 2025
கடலூர்: தண்டவாளத்தில் தலை இல்லாமல் கிடந்த உடல்

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கும், மணிமுத்தாறு மேம்பாலத்திற்கும் இடையே நேற்று இரவு தண்டவளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் உடல் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News October 14, 2025
கடலூர் போஸ்ட் ஆபீஸ் வங்கியில் வேலை!

கடலூர் இந்திய அஞ்சல் வங்கியில் (IPPB) Executive காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடம்: சிதம்பரம் & கடலூர்
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4. வயது வரம்பு: 20-35
5. சம்பளம்: ரூ.30,000
6. கடைசி தேதி: 29.10.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <