News October 14, 2025
தொழிற்பயிற்சி நிலையங்களில் கால அவகாசம் நீடிப்பு – ஆட்சியர்

குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2025 ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. நேரடி மாணவர் சேர்க்கை மூலம் சேர்க்கை பெற கால அவகாசம் 17-10-2025 வரை நீடிக்கப்பட்டுள்ளது. தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு வயது வரம்பு ஆண்கள் 14 முதல் 40 வயது வரை, பெண்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை என்று அதில் அவர் கூறியுள்ளார்.
Similar News
News October 14, 2025
ஆளூர் அருகே ரெயில் மோதி ஒருவர் பலி

குமரி, இரணியல் – ஆளூருக்கு இடையே உள்ள ரெயில் தண்டவாளத்தில் நேற்று (அக்.13) ஒரு முதியவர் ரெயிலில் அடிப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது, இறந்தவர் ஆலுவிளையை சேர்ந்த அல்லிராஜ் (வயது 90) என்பதும், தண்டவாளம் அருகே நடந்து சென்றபோது அவர் மீது ரெயில் மோதியதும் தெரியவந்தது.
News October 14, 2025
குமரி: சிறுவனின் தாய் மீது வழக்கு

சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் வழுக்கம்பாறை பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு சிறுவனை பிடித்து விசாரித்தபோது அவரது வயது 17 என்பதும் பிளஸ்-1மாணவன் என்பதும் தெரியவந்தது. அந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், இரு சக்கர வாகனத்தை ஓட்டுவதற்கு அனுமதித்த இளம் சிறாரின் தாய் மீது வழக்குப்பதிவு.
News October 14, 2025
குமரி: உங்க இடம் நீளம், அகலம் தெரியலையா??

குமரி மக்களே, உங்கள் வீடு/நிலத்திற்கு தெளிவான வரைபடம் (FMP) இல்லையா? இடம் நீளம், அகலம் தெரியாமா கவலையா? இனிமேல் அவசியமில்லை! இங்கு <