News April 16, 2024
செமஸ்டர் கட்டணம் செலுத்த கால அவகாசம்
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வாணையர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், ஆன்லைனில் பல்கலை. செமஸ்டர் தேர்வு கட்டணம் செலுத்த எவ்வித பிரச்சனைகளும் இல்லை. அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கான பாடப்பிரிவுகள் இணையதளத்தில் பதியவில்லை என தெரியவந்துள்ளது. விடுபட்ட அந்த பாடப்பிரிவுகளை இணையதளத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கட்டணம் செலுத்த மேலும் 5 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் என்றார்.
Similar News
News November 20, 2024
நெல்லையில் 95 மிமீ மழை பதிவு
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று மாலை 4 மணி வரை 95 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 20 மில்லி மீட்டரும் அதற்கு அடுத்தபடியாக பாளையங்கோட்டையில் 16 மில்லி மீட்டரும் அம்பாசமுத்திரத்தில் 14 மில்லி மீட்டர், நாங்குநேரியில் 11 மில்லி மீட்டரும், சேரன்மகாதேவியில் 12 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
News November 20, 2024
நெல்லை மாவட்ட நிர்வாகத்துடன் செயல்பட வாய்ப்பு
பேரிடர் காலங்களில் சமூகத்தை பாதுகாக்க திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுவது குறித்து மாவட்ட நிர்வாகம் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் சமூக வலைதள பொறுப்பாளர்கள் படத்தில் காட்டப்பட்டுள்ள QR ஸ்கேன் மூலம் இணைந்து மாவட்ட நிர்வாகத்துடன் பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு பெற்று செயல்படலாம் என தெரிவித்துள்ளனர்.
News November 20, 2024
பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க எஸ்பி அறிவுறுத்தல்
திருநெல்வேலி மாவட்டத்தில் தற்பொழுது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மழை காலங்களில் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும், மின்சாரம் சம்பந்தமான பொருட்களை கையாளும்போதும், வெளியில் செல்லும்போதும் கவனமுடன் இருக்குமாறும், ஆறு, குளம் போன்ற இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் எஸ்பி சிலம்பரசன் கேட்டுக் கொண்டுள்ளார்.