News October 14, 2025
புதுவை: சொத்து வரி செலுத்தாத மனைகள் ஜப்தி

புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட எல்லைகளில் உள்ள காலி மனைக்கான சொத்து வரியை 15 நாட்களுக்குள் நகராட்சி அலுவலகத்தில் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில், புதுச்சேரி நகராட்சிகள் சட்டம் 1973 பிரிவு 180ன் படி சொத்து வரி செலுத்தாதோர் விற்கிரயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியிலுள்ள அசையும் சொத்தின் மீது ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ் ராஜ் அறிவித்துள்ளார்.
Similar News
News October 14, 2025
புதுச்சேரி: எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்தும், மாணவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும், பல்கலைக்கழக மானிய குழு 2015 பாலியல் புகார் மீது விசாரணை குழு அமைக்க வலியுறுத்தி உருளையன்பேட்டை எம்எல்ஏ நேரு தலைமையில் புதுவை பொதுநல அமைப்புகள் மற்றும் காரைக்கால் மக்கள் போராட்ட குழு சார்பாக இன்று (அக்.14) காலை 11 மணி அளவில் அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
News October 14, 2025
புதுவை: சுகாதார பணியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கம் முற்றுகை

புதுவை, விக்கோந் தே சுயிலாக் வீதியில் சுகாதார பணியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கம் இயங்குகிறது. இங்கு, உறுப்பினர்கள் வாங்கும் கடன்களுக்கு, தீபாவளியின் போது, லாபத்தின் அடிப்படையில் 3 முதல் 7 சதவீதம் வரை வட்டிக்கழிப்பு தொகை வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக உறுப்பினர்களுக்கு வட்டிக்கழிப்பு தொகை வழங்கவில்லை. இதனை வழங்க வலியுறுத்தி சங்க உறுப்பினர்கள், சங்க அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
News October 14, 2025
புதுச்சேரி: அரசு அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு!

புதுச்சேரியில் விளம்பரத்துறை இயக்குநர் முனிசாமிக்கு கூடுதலாக எழுதுபொருள் அச்சகத்துறை இயக்குநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், காரைக்கால் உள்ளாட்சித் துறை துணை இயக்குநர் சுபாசுக்கு நகராட்சி ஆணையராகவும்; குடிமைப்பொருள் துணை இயக்குநர் சச்சிதானந்துக்கு காரைக்கால் கோயில் அதிகாரியாகவும் கூடுதல் பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சார்பு செயலாளர் ஜெய்சங்கர் பிறப்பித்துள்ளார்.