News October 14, 2025
நீலகிரியில் 2½ வயது ஆண் குழந்தை கொலை

கூடலூர் ஓ.வி.எச். சாலை பகுதியை சேர்ந்த தம்பதி பிஜு ஜேக்கப்-சரஸ்வதி. இவர்களுக்கு ஆகாஷ் (12). பிரதிக் ஷா (10), லோகித் (2½) என 3 குழந்தைகள் இருந்தனர். கடன் சுமை காரணமாக சரஸ்வதி 3 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உறவினர்கள் அவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் இளைய மகன் லோகித் சிகிச்சை பலனின்றி இறந்தான். கூடலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
Similar News
News October 14, 2025
நீலகிரி: நிலம் வாங்க ரூ.5 லட்சம் வேண்டுமா?

1)நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
2)குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3)2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
4)100 சதவித முத்திரைத்தாள்,பதிவுக்கட்டணம் இலவசம்
5)newscheme.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்
மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம்.SHARE பண்ணுங்க!
News October 14, 2025
நீலகிரி: B.E படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பொறியியல் காலியிடங்களுக்கு 474 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. CIVIL, MECH., EEE, ECE உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த B.E/B.Tech படித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அக்.16க்குள் <
News October 14, 2025
நீலகிரி மக்களே எச்சரிக்கை!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களான தென்காசி கோவை, தேனி, ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வெளியே செல்பவர்கள் முன்னெச்சரிக்கையா இருங்க. SHARE பண்ணுங்க.