News October 14, 2025
நெல்லை: கோழிக்கழிவுகள் விவகாரம் – ஒருவர் கைது

நெல்லை, மதவக்குறிச்சி கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் மர்ம நபர்கள் சுமார் 80க்கும் மேற்பட்ட கோழிகளின் உடல்கள் கோழி கழிவுகளை கொட்டி சென்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதாரக் கேடு மற்றும் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதுக்குறித்து மானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் டவுன் அண்ணா தெருவை சேர்ந்த பரத்மாரி என்பவர் கோழிக்கழிவுகளை கொட்டியது தெரியவந்தது. அவர் கைது செய்யபட்டார்.
Similar News
News October 14, 2025
நெல்லை: உங்க இடம் நீளம், அகலம் தெரியலையா??

நெல்லை மக்களே, உங்கள் வீடு/நிலத்திற்கு தெளிவான வரைபடம் (FMP) இல்லையா? இடம் நீளம், அகலம் தெரியாமா கவலையா? இனிமேல் அவசியமில்லை! இங்கு <
News October 14, 2025
நெல்லை தேர்தல் பிரிவிற்கு புதிய தாசில்தார்

நெல்லை மாவட்டத்தில் வருவாய் துறையில் தாசில்தார், 7 துணை தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சுகுமார் உத்தரவிட்டுள்ளார். தேர்தல் பிரிவு தனி தாசில்தார் பாலமுருகன் நில எடுப்பு தனி தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் மறுக்கால் குறிச்சி சிப்காட் தொழில் பூங்கா, நில எடுப்பு தனி தாசில்தார் முருகன் தேர்தல் பிரிவு புதிய தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
News October 14, 2025
நெல்லை: கரூர் விவகாரம் – நயினார் நாகேந்திரன் அறிக்கை

கரூர் சம்பவத்தில் தங்கள் மீது எந்தவித தவறும் இல்லை என்பதை நிறுவ எதிர் தரப்பினரை குற்றவாளி கூண்டில் நிறுத்தி தங்கள் இஷ்டத்துக்கு கட்டுக்கதைகளை புனைந்து வந்தது திமுக அரசு. இந்த அவசரத்திற்கு பின்னால் ஏதோ ஒரு அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்து இருக்கிறது என்ற மக்களின் சந்தேகத்திற்கு கூடிய விரைவில் விடை கிடைக்கப் போகிறது. அப்பாவி பொதுமக்களை காவு வாங்கிய கயவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என நயினார் அறிக்கை.