News October 14, 2025

கடலூர்: போலீசார் உதவியுடன் லாட்டரி விற்பனை!

image

கடலூர் மஞ்சக்குப்பம் அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஜெயராமன், சாரதி, மல்லிகா, பிரகாஷ், ஆகியோரை புதுநகர் காவல் போலீசார் கடந்த அக்.13 அன்று பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் சில போலீசார் உதவியுடன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், 5 செல்போன்கள், லாட்டரி சீட்டுகள் விற்ற பணம் ரூ.22,94,500 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Similar News

News October 14, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்​டத்​தில், பெண் குழந்​தைகளின் சமூக முன்​னேற்​றத்​துக்​காக, சிறப்​பாக பங்​காற்​றிய 13-18 வயதுக்குட்​பட்ட பெண் குழந்​தைகளுக்கு ஆண்டுதோறும் மாநில அரசின் சார்​பில், விருது மற்​றும் ரூ.1 லட்​சத்​துக்​கான காசோலை வழங்​கப்​பட்டு வருகிறது. விருதுக்கு விண்​ணப்​பிக்க http://awards.tn.gov.in என்ற இணை​யதளத்​தில் வரும் நவ. 29-க்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News October 14, 2025

கடலூர்: தண்டவாளத்தில் தலை இல்லாமல் கிடந்த உடல்

image

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கும், மணிமுத்தாறு மேம்பாலத்திற்கும் இடையே நேற்று இரவு தண்டவளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் உடல் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 14, 2025

கடலூர் போஸ்ட் ஆபீஸ் வங்கியில் வேலை!

image

கடலூர் இந்திய அஞ்சல் வங்கியில் (IPPB) Executive காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடம்: சிதம்பரம் & கடலூர்
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4. வயது வரம்பு: 20-35
5. சம்பளம்: ரூ.30,000
6. கடைசி தேதி: 29.10.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>இங்கே கிளிக் <<>>செய்யவும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!