News October 14, 2025
திருப்போரூரில் மாட்டால் நிகழ்ந்த மரணம்!

திருப்போரூர் அடுத்த கண்ணகப்பட்டைச் சேர்ந்த கண்ணன் (42) என்பவர், கடந்த 9-ஆம் தேதி வேலைக்குச் சென்றபோது, காலவாக்கம் அருகே மாடு குறுக்கே ஓடியதால், அவரது பைக் நிலைதடுமாறி தடுப்புச் சுவரில் மோதியது. விபத்தில் படுகாயமடைந்த கண்ணன், நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News October 14, 2025
செங்கல்பட்டில் மழை வெளுக்கும்!

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய கடலோரப் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டத்திலும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் வானிலை எப்படி உள்ளது என கமெண்ட் பண்ணுங்க.
News October 14, 2025
செங்கல்பட்டு: ரயில்வேயில் நிரந்தர வேலை; இன்றே கடைசி!

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News October 14, 2025
செங்கல்பட்டு: கல்லூரி மாணவன் விடுதியில் தற்கொலை

திருப்பத்தூரை சேர்ந்தவர் மாவோ (20). சேலையூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் இவரின் தந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் இவரால் படிப்பை தொடர முடியவில்லை. எனவே கல்லூரிக்கு செலுத்திய கட்டணததை திரும்ப கேட்டுள்ளார். கல்லூரி நிர்வாகம் முறையான பதில் அளிக்காததால் மன உளைச்சலில் இருந்தவர் கல்லூரி விடுதியில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் பெரும் சோகம் செற்பட்டுள்ளது.