News October 14, 2025
குமரி: இன்று ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

குமரி மாவட்டத்தில் இன்று (அக்.14) உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் : கொல்லங்கோடு நகராட்சியில் 22, 23, 24 வார்டுகளுக்கு ஸ்ரீ பத்ரா ஆடிட்டோரியத்திலும், திங்கள் நகர் பேரூராட்சி வார்டு எண் 1 முதல் 8 வரை குமார் திருமண மண்டபத்தில் வைத்தும், முன்சிறை- குளப்புறம் பகுதிகளுக்கு கிறிஸ்து அரசர் சமூக நலக்கூடத்தில் மேலும் ராஜாக்கமங்கலம் மருங்கூர் பேரூராட்சியில் நடைபெற உள்ளது. SHARE!
Similar News
News October 14, 2025
குமரி: சிறுவனின் தாய் மீது வழக்கு

சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் வழுக்கம்பாறை பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு சிறுவனை பிடித்து விசாரித்தபோது அவரது வயது 17 என்பதும் பிளஸ்-1மாணவன் என்பதும் தெரியவந்தது. அந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், இரு சக்கர வாகனத்தை ஓட்டுவதற்கு அனுமதித்த இளம் சிறாரின் தாய் மீது வழக்குப்பதிவு.
News October 14, 2025
குமரி: உங்க இடம் நீளம், அகலம் தெரியலையா??

குமரி மக்களே, உங்கள் வீடு/நிலத்திற்கு தெளிவான வரைபடம் (FMP) இல்லையா? இடம் நீளம், அகலம் தெரியாமா கவலையா? இனிமேல் அவசியமில்லை! இங்கு <
News October 14, 2025
குமரி: 1200 லிட்டர் மண்ணெண்ணெய் கடத்தல்

கொல்லங்கோடு போலீசார் மிக்கேல் காலனிபுரம் பகுதியில் நேற்று (அக்.13) வாகன சோதனையில் ஈடுபட்டபோது அங்கு வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தமிழக மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும். 1,200 லிட்டர் மண்ணெண்ணெயை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. காரில் மண்ணெண்ணையுடன் 37 கேன்களை பறிமுதல் செய்த போலீசார், கேரள மாநிலம் பொழியூரை சேர்ந்த அமீன் (38), ஷாஜகான் (39) ஆகியோரை கைது செய்தனர்.