News October 14, 2025
4 மாவட்டங்களில் பேய் மழை வெளுக்கும்

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், வருகிற 19-ம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், வெளியில் செல்லும்போது கவனமாக செல்லவும்.
Similar News
News October 14, 2025
எல்லையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நேற்றிரவு 7 மணி அளவில் ஜம்மு காஷ்மீர், மச்சில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி ஊடுருவலை முறியடித்தனர். பனிப்பொழிவை பயன்படுத்தி, பயங்கரவாதிகள் ஊடுருவலாம் என்பதால் எல்லையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
News October 14, 2025
பினராயி மகன் மீது நடவடிக்கை எடுக்க காங்., கடிதம்

பண முறைகேடு வழக்கில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மகன் விவேக் கிரண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ED-க்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. 2023-ல் விவேக் கிரண் மீது பண மோசடி தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. ஆனால், இதுதொடர்பான விசாரணைக்கு அவர் இதுவரை ஆஜராகவில்லை. இந்நிலையில், வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என்று காங்., கோரிக்கை விடுத்துள்ளது.
News October 14, 2025
பாமக ஒற்றுமைக்கு GK மணி அழைப்பு!

பாமகவின் பேரவை குழு தலைவராக தாமே தொடர்வதாக GK மணி தெரிவித்துள்ளார். சபாநாயகரை சந்தித்த பிறகு பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாமகவுக்கு வந்துள்ள சோதனை, வேதனை அளிப்பதாக கூறினார். பாமக ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்த அவர், இல்லை எனில் அனைவருக்கும் தாழ்வு என்றார். முன்னதாக, குழு தலைவர் பொறுப்பிலிருந்து GK மணியை நீக்கக்கோரி அன்புமணி ஆதரவு MLA-க்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.