News October 14, 2025
Bussiness Roundup: தமிழகத்தில் வெள்ளிக்கு தட்டுப்பாடு

*வாரத்தின் முதல் நாளான நேற்று, இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சியுடன் நிறைவு செய்தன. *அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து ₹88.67 ஆனது. *நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தி 14 லட்சம் கிலோ குறைந்துள்ளது. *அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த, இந்திய அதிகாரிகள் குழு இந்த வாரம் அமெரிக்கா செல்ல உள்ளது. *தமிழகத்தில் வெள்ளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
Similar News
News October 14, 2025
பினராயி மகன் மீது நடவடிக்கை எடுக்க காங்., கடிதம்

பண முறைகேடு வழக்கில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மகன் விவேக் கிரண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ED-க்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. 2023-ல் விவேக் கிரண் மீது பண மோசடி தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. ஆனால், இதுதொடர்பான விசாரணைக்கு அவர் இதுவரை ஆஜராகவில்லை. இந்நிலையில், வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என்று காங்., கோரிக்கை விடுத்துள்ளது.
News October 14, 2025
பாமக ஒற்றுமைக்கு GK மணி அழைப்பு!

பாமகவின் பேரவை குழு தலைவராக தாமே தொடர்வதாக GK மணி தெரிவித்துள்ளார். சபாநாயகரை சந்தித்த பிறகு பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாமகவுக்கு வந்துள்ள சோதனை, வேதனை அளிப்பதாக கூறினார். பாமக ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்த அவர், இல்லை எனில் அனைவருக்கும் தாழ்வு என்றார். முன்னதாக, குழு தலைவர் பொறுப்பிலிருந்து GK மணியை நீக்கக்கோரி அன்புமணி ஆதரவு MLA-க்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
News October 14, 2025
சற்றுமுன்: விலை ஒரே நாளில் ₹9,000 உயர்ந்தது

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி விலையும் வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் வெள்ளி விலை கிராமுக்கு ₹9 உயர்ந்து ₹206-க்கும், கிலோ வெள்ளி ₹9000 உயர்ந்து ₹20,6000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் ₹9 ஆயிரம் உயர்ந்தது இதுவே முதல்முறை. இனி விலை குறைய வாய்ப்பில்லை என நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.