News October 14, 2025
National Roundup: ராகுல் காந்தி நேரில் ஆஜராக சம்மன்

*PM மோடியை அவமதித்து பேசிய வழக்கில் ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் நவ.26-ம் நேரில் ஆஜராக பிஹார் கோர்ட் உத்தரவு. *பிரம்மபுத்திரா நதி படுக்கையில் மின்சாரம் எடுக்க ₹6.4 லட்சம் கோடி ஒதுக்கீடு. *பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் என ராணுவ தளபதி அனில் சவுகான் பேச்சு. *பிஹாரில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி 65 தொகுதிகளுக்கான 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
Similar News
News October 14, 2025
Windows 10-க்கான காலக்கெடு நீட்டிப்பு

<<17898791>>Windows 10<<>> OS-ஐ முடிவுக்கு கொண்டு வரும் திட்டத்தை மைக்ரோசாஃப்ட் சில மாதங்களுக்கு தள்ளிப்போட்டுள்ளது. இன்றுடன் செக்யூரிட்டி அப்டேட் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பயனர்களின் கோரிக்கையை ஏற்று, 2026 ஆகஸ்ட் வரை நீட்டித்துள்ளது. இந்த குறிப்பிட்ட காலவரையறைக்குள் பயனர்கள் Windows 11-க்கு அப்டேட் செய்ய வேண்டும் அல்லது சைபர் தாக்குதலுக்கு எளிதாக உள்ளாகும் வாய்ப்பு ஏற்படும்.
News October 14, 2025
எந்தெந்த தொகுதி: பாஜக கூட்டணியில் குழப்பம்

பிஹார் தேர்தலையொட்டி, பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் குழப்பம் நீட்டிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக, ஜேடியு தலா 101 தொகுதிகளிலும், சிராக் பஸ்வான் கட்சி 29 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. ஆனால், கூட்டணி கட்சிகள் ஒரே தொகுதிகளை கேட்பதால், தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. இதனால், இன்று நடக்கவிருந்த பாஜக கூட்டணி தலைவர்கள் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
News October 14, 2025
Sports Roundup: துணை கேப்டனான வைபவ்!

✱ஸ்குவாஷ்: ஜப்பான் ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் தொடரில், தமிழக வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா, ஹயா அலியை (எகிப்து) வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்
✱கிரிக்கெட்: ரஞ்சி தொடரில் பிஹார் அணியின் துணை கேப்டனாக இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
✱கால்பந்து: 2026 உலக கோப்பை கால்பந்து தொடரில் விளையாட, கானா அணி தகுதி பெற்றுள்ளது. இத்தொடருக்கு தற்போது வரை 18 அணிகள் தகுதி பெற்றுள்ளன.