News October 14, 2025
IND Vs PAK: ஹாக்கியிலும் தொடருமா பஞ்சாயத்து?

மலேசியாவில் இன்று நடைபெற உள்ள Sultan of Johor Cup ஹாக்கி போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இதில் இந்திய வீரர்கள் கைக்கொடுக்க மறுத்தால், அதை சீரிஸாக எடுத்துக் கொள்ளாமல், களத்தில் கவனமாக இருக்கும்படி, பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பு தங்களது வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்த கைகுலுக்கல் பஞ்சாயத்து தொடங்கியது.
Similar News
News October 14, 2025
விஜய்யை பார்த்ததும் செந்தில் பாலாஜியை அட்டாக் செய்த CTR

விஜய் உடனான சந்திப்புக்கு பின், CTR நிர்மல்குமாரிடம் கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியாமலேயே SC-யில் மனு தாக்கல் செய்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, பிறழ்சாட்சியாக மாற்றுவதில் மன்னராக இருப்பவர் செந்தில் பாலாஜி. அவரின் பழைய வழக்கில் 50 பேரையே பிறழ்சாட்சியாக சொல்ல வைத்த செந்தில் பாலாஜிக்கு, இங்குள்ள 4 பேரை மிரட்டி மாத்தி பேச வைப்பது பெரிய விஷயம் அல்ல என்றார்.
News October 14, 2025
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கிறீங்களா?

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது பலரின் வழக்கம். இதனால், உடலின் Metabolism வழக்கத்தை விட 30% அதிகரிக்கும் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். குடல் இயக்கம் ஆரோக்கியமாகி, உடலில் நீர்ச்சத்து குறையாமல் நீடிக்கிறது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடல் எடை குறையும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகின்றனர். அதே நேரத்தில், ஆரோக்கியமாக இருக்க ஒரு நாளைக்கு 4 லிட்டர் தண்ணீர் குடியுங்கள்.
News October 14, 2025
ஆஸி. தொடரில் இருவரின் எதிர்காலம் தெரிந்துவிடும்..

ஆஸி., தொடரில் ரோஹித், கோலி ஆகியோரின் பெர்ஃபார்மன்ஸ், அவர்களின் எதிர்காலத்தை முடிவு செய்யும் என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இளம் வீரர்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பதால், நெருக்கடி ஏற்பட்டிருப்பதை இருவரும் உணர்ந்திருப்பார்கள் என கூறிய ரவி சாஸ்திரி, அவர்களின் உடற்தகுதி, ஃபார்ம் ஆகியவை ஆஸி. தொடரின் முடிவில் தெரிந்துவிடும் எனவும் கூறினார்.