News October 14, 2025

செங்கல்பட்டு: உடனடி தீர்வு எல்லாமே ஈஸி!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், சாதி சான்றிதழ், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார், ரேஷன் அட்டை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், இந்த <>லிங்கில் கிளிக்<<>> செய்து சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். ஷேர் பண்ணுங்க.

Similar News

News October 14, 2025

செங்கல்பட்டு: TNSTC சூப்பர் அறிவிப்பு… APPLY!

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 6 மண்டலங்களில் 1,588 பயிற்சி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. BE பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.9,000 & டிப்ளமோவுக்கு மாதம் ரூ.8,000 உதவித்தொகை வழங்கப்படும். கலை, அறிவியல், வணிகப் பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். <>விண்ணப்பிக்க <<>>அக்.18 கடைசி தேதி. நேரடித் தேர்வு/நேர்காணல் இல்லை. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News October 14, 2025

செங்கல்பட்டு: சாலையை கடக்க முயன்றவர் பலி

image

சிங்கபெருமாள் கோவில் அடுத்த தெள்ளிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு,(52) ‘டைல்ஸ்’ ஒட்டும் வேலை பார்த்து வந்தார். ஸ்ரீபெரும்புதுார் – சிங்கபெருமாள் கோவில் சாலையில், தெள்ளிமேடு பேருந்து நிறுத்தம் அருகில், பாலு சாலையைக் கடக்க முயன்றார். அப்போது, திருவள்ளூரில் இருந்து சிங்கபெருமாள் கோவில் நோக்கி சென்ற ‘யமஹா எம்.டி.,’ பைக் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜாக்கிரதையா சாலையை கடந்து செல்லுங்க.

News October 14, 2025

திருப்போரூரில் மாட்டால் நிகழ்ந்த மரணம்!

image

திருப்போரூர் அடுத்த கண்ணகப்பட்டைச் சேர்ந்த கண்ணன் (42) என்பவர், கடந்த 9-ஆம் தேதி வேலைக்குச் சென்றபோது, காலவாக்கம் அருகே மாடு குறுக்கே ஓடியதால், அவரது பைக் நிலைதடுமாறி தடுப்புச் சுவரில் மோதியது. விபத்தில் படுகாயமடைந்த கண்ணன், நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!