News October 14, 2025
International Roundup: நாட்டை விட்டு தப்பி ஓடிய மடகாஸ்கர் அதிபர்

*மடகாஸ்கரில் இளைஞர்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் ரஜோலினா நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். *மெக்ஸிகோ வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64ஆக உயர்ந்துள்ளது. *டிரம்ப்பை வரும் வெள்ளிக்கிழமை சந்தித்து பேச உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். *பிரேசில் முன்னாள் அதிபர் பொல்சொனாரோ வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
Similar News
News October 14, 2025
முல்லைப்பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழக-கேரள எல்லையில் உள்ள முல்லைப்பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால், வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து சென்று அணை முழுவதும் சோதனை நடத்தினர். அதேபோல், திருச்சி கலெக்டர் ஆபிஸ், ஸ்ரீரங்கம் கோயில் உள்ளிட்ட இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனைக்கு பிறகு இவை அனைத்தும் புரளி என தெரியவந்துள்ளது. அண்மை காலமாக வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
News October 14, 2025
BREAKING: இரவில் விஜய்யை சந்தித்தார்

கடந்த 15 நாள்களாக தலைமறைவாக இருந்த தவெக இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் வெளியே வந்தார். செப்.27-ம் தேதி கரூரில் விஜய் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், N.ஆனந்த், நிர்மல்குமார் தலைமறைவாகினர். தற்போது, கரூர் வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், முதல் ஆளாக வெளியே வந்த நிர்மல்குமார், இரவு விஜய்யை சந்தித்து 1 மணி நேரத்திற்கு ஆலோசனை நடத்தியுள்ளார்.
News October 14, 2025
கோயிலுக்குச் செல்லும் பொழுது.. இத மறக்காதீங்க!

எப்போதும் கோயிலுக்கு செல்லும் போது, சில விஷயங்களை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் *பிறப்பு, இறப்பு தீட்டுக்களுடன் கோயிலுக்குள் செல்லக் கூடாது *வெறும் கையுடன் செல்லாமல், குறைந்தபட்சம் பூக்களையாவது கொண்டு செல்ல வேண்டும் *குளிக்காமல் கோயிலுக்குள் செல்லக் கூடாது * கைலி, தொப்பி, முண்டாசு அணிந்துகொண்டு செல்லக்கூடாது *ஈர துணி, அரைகுறை ஆடைகளுடன் கோயிலுக்குள் செல்லக்கூடாது. SHARE IT.