News October 14, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 14, புரட்டாசி 28 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:31 AM -9:00 AM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: அஷ்டமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சிறப்பு: தேய்பிறை அஷ்டமி விரதம் ▶வழிபாடு: பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுதல்.
Similar News
News October 14, 2025
மத்திய அமைச்சருக்கு அனுமதி மறுப்பு

கல்லூரி விழாவில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேற்று சென்னை வந்திருந்தார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு செல்ல லேட் ஆனதால், ஹெலிகாப்டரில் அமைச்சர் விமான நிலையம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மாலை 6 மணிக்கு மேல் பாதுகாப்பு அமைச்சக ஹெலிகாப்டர்கள் தவிர்த்த பிற ஹெலிகாப்டர்கள் பறக்க அனுமதி இல்லாததால், சாலைமார்க்கமாக விமான நிலையம் சென்று, தனி விமானத்தில் அமைச்சர் நாக்பூர் புறப்பட்டார்.
News October 14, 2025
நானா இப்படி நடித்தேன்?

நானா இப்படி நடித்தேன் என ஆச்சரியப்படும் அளவிற்கு ‘பைசன்’ படத்தில் நடித்துள்ளதாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார். ‘பிரேமம்’ படத்தில் நடித்ததை போன்ற ஒரு பேரார்வத்தை, இந்த படத்தில் நடித்த போது தன்னால் உணர முடிந்ததாகவும், இப்படத்திற்கு பிறகு புதிதாக பிறந்தது போல உணருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், செங்கல் தயாரிப்பு, உழவுப்பணி இதையெல்லாம் கற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News October 14, 2025
4 மாவட்டங்களில் பேய் மழை வெளுக்கும்

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், வருகிற 19-ம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், வெளியில் செல்லும்போது கவனமாக செல்லவும்.