News October 14, 2025
1,968 பாலஸ்தீனர்களை விடுவிக்க இஸ்ரேல் முடிவு

இன்று இஸ்ரேல் பணயக் கைதிகள் 20 பேர் விடுவிக்கப்பட்டனர். காஸா அமைதி ஒப்பந்தப்படி, சிறைகளில் நீண்டகால அடைக்கப்பட்டுள்ள 1,968 பாலஸ்தீனர்களை விடுதலை செய்யும் ஏற்பாடுகளை இஸ்ரேல் அரசு தொடங்கியுள்ளது. இதற்காக பல்வேறு சிறைகளில் இருந்தோரை ஒப்படைப்பு மையங்களுக்கு அனுப்பும் பணிகளை தொடங்கியுள்ளதாகவும், செயல்முறைகள் நிறைவடைந்த பின் காஸாவுக்கு அவர்கள் அனுப்பப்படுவார்கள் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
Similar News
News October 14, 2025
கரூருக்கு எப்போது செல்கிறார் விஜய்?

கரூருக்கு விஜய் செல்ல அனுமதிக்க கோரி SP அலுவலகத்தில் இன்று தவெக சார்பில் மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று செய்தியாளர்களை சந்தித்த தவெக மூத்த நிர்வாகி CTR நிர்மல் குமார், விஜய் கரூர் செல்வதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படுவதாக கூறியிருந்தார். அந்தவகையில், மாவட்ட SP அனுமதி அளிக்கும் பட்சத்தில், வரும் 17-ம் தேதி விஜய் கரூர் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
News October 14, 2025
அக்டோபர் 14: வரலாற்றில் இன்று

*உலகத் தர நிர்ணய நாள். *1956 – டாக்டர் அம்பேத்கர் தனது 3.85 லட்சம் ஆதரவாளர்களுடன் பௌத்தத்திற்கு மதம் மாறினார். *1964 – மார்ட்டின் லூதர் கிங் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார். *1981 – இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பயிற்சியாளருமான கவுதம் கம்பீர் பிறந்தநாள். *2005 – தமிழ் நவீன இலக்கிய ஆளுமை சுந்தர ராமசாமி இறந்தநாள்.
News October 14, 2025
அன்புமணி கூறியது பொய்யான தகவலா?

ராமதாஸ் உடல்நிலை குறித்து அன்புமணி பதற்றத்தை ஏற்படுத்துவதாக பாமக MLA அருள் தெரிவித்துள்ளார். ராமதாஸ் அனுமதிக்கப்பட்ட ஹாஸ்பிடலுக்கு வந்த அவர், டாக்டரை மட்டுமே பார்த்துவிட்டு சென்றார். ராமதாஸுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை மட்டுமே செய்யப்பட்டது, ICU-வுக்கு கொண்டு செல்லவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக, ICU-வுக்கு கொண்டு சென்றதால் தந்தையை பார்க்க முடியவில்லை என அன்புமணி கூறியிருந்தார்.