News October 14, 2025
8 ஆண்டுகளில் மிகக் குறைந்த பணவீக்கம்

செப்டம்பர் மாதத்தில் நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில், தேசிய அளவில் சில்லறை பணவீக்கம் 1.54% ஆகக் குறைந்துள்ளதாக (தமிழ்நாட்டில் 2.77%) தேசிய புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் இதுதான் குறைவாகும். காய்கறிகள், பருப்புகள், பழங்கள், எண்ணெய், முட்டை, ஏன் எரிபொருள்களின் விலைகள் கூட குறைந்துள்ளதாகவும், இதனால் நுகர்வோருக்கு நிவாரணம் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News October 14, 2025
அக்டோபர் 14: வரலாற்றில் இன்று

*உலகத் தர நிர்ணய நாள். *1956 – டாக்டர் அம்பேத்கர் தனது 3.85 லட்சம் ஆதரவாளர்களுடன் பௌத்தத்திற்கு மதம் மாறினார். *1964 – மார்ட்டின் லூதர் கிங் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார். *1981 – இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பயிற்சியாளருமான கவுதம் கம்பீர் பிறந்தநாள். *2005 – தமிழ் நவீன இலக்கிய ஆளுமை சுந்தர ராமசாமி இறந்தநாள்.
News October 14, 2025
அன்புமணி கூறியது பொய்யான தகவலா?

ராமதாஸ் உடல்நிலை குறித்து அன்புமணி பதற்றத்தை ஏற்படுத்துவதாக பாமக MLA அருள் தெரிவித்துள்ளார். ராமதாஸ் அனுமதிக்கப்பட்ட ஹாஸ்பிடலுக்கு வந்த அவர், டாக்டரை மட்டுமே பார்த்துவிட்டு சென்றார். ராமதாஸுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை மட்டுமே செய்யப்பட்டது, ICU-வுக்கு கொண்டு செல்லவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக, ICU-வுக்கு கொண்டு சென்றதால் தந்தையை பார்க்க முடியவில்லை என அன்புமணி கூறியிருந்தார்.
News October 14, 2025
National Roundup: ராகுல் காந்தி நேரில் ஆஜராக சம்மன்

*PM மோடியை அவமதித்து பேசிய வழக்கில் ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் நவ.26-ம் நேரில் ஆஜராக பிஹார் கோர்ட் உத்தரவு. *பிரம்மபுத்திரா நதி படுக்கையில் மின்சாரம் எடுக்க ₹6.4 லட்சம் கோடி ஒதுக்கீடு. *பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் என ராணுவ தளபதி அனில் சவுகான் பேச்சு. *பிஹாரில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி 65 தொகுதிகளுக்கான 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.