News October 13, 2025

நகை கடன்.. முக்கிய தகவல்

image

வாடிக்கையாளர்கள் கடனை செலுத்த தவறினால் நகைகளை ஏலம் விடுவதே நடைமுறை. அதற்கு முன் உரிமையாளரிடம் முறையாக அறிவித்திருக்க வேண்டும். ஏல இருப்பு விலை(RESERVE PRICE) நகையின் மதிப்பில் 90% இருக்க வேண்டும். 2 ஏலங்கள் தோல்வியுற்ற பிறகு இருப்பு விலையை 85% ஆக குறைக்கலாம். ஏலத்தில் கூடுதலாக கிடைக்கும் தொகையை 7 நாள்களுக்குள் கடன் வாங்கியவரிடம் கொடுக்க வேண்டும். SHARE IT.

Similar News

News October 14, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: காலமறிதல் ▶குறள் எண்: 488 ▶குறள்: செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை. ▶பொருள்: பகைவர்க்கு முடிவு ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக் கவிழ்ந்திடும் உரிய நேரம் வரும் வரையில் தங்களின் பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும்.

News October 14, 2025

IND Vs PAK: ஹாக்கியிலும் தொடருமா பஞ்சாயத்து?

image

மலேசியாவில் இன்று நடைபெற உள்ள Sultan of Johor Cup ஹாக்கி போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இதில் இந்திய வீரர்கள் கைக்கொடுக்க மறுத்தால், அதை சீரிஸாக எடுத்துக் கொள்ளாமல், களத்தில் கவனமாக இருக்கும்படி, பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பு தங்களது வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்த கைகுலுக்கல் பஞ்சாயத்து தொடங்கியது.

News October 14, 2025

International Roundup: நாட்டை விட்டு தப்பி ஓடிய மடகாஸ்கர் அதிபர்

image

*மடகாஸ்கரில் இளைஞர்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் ரஜோலினா நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். *மெக்ஸிகோ வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64ஆக உயர்ந்துள்ளது. *டிரம்ப்பை வரும் வெள்ளிக்கிழமை சந்தித்து பேச உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். *பிரேசில் முன்னாள் அதிபர் பொல்சொனாரோ வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!