News October 13, 2025
குன்னூர் இளைஞர்களுக்கு ரூ.15,000 அபராதம்

குன்னூர் உலிக்கல் சேலாஸ் அருகே சாலை ஓரத்தில் படுத்திருந்த காட்டெருமையின் முன்புறம், மூன்று இளைஞர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர், மூன்று நபர்களுக்கு குன்னூர் 15,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கி அனுப்பிவைத்தார்.
Similar News
News October 14, 2025
பசுமாட்டினை அடித்துக் கொன்ற மர்ம விலங்கு

கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் மர்ம விலங்களின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், நேற்று காலை கூடலூர் பிரதான பகுதியான காலம்புழா அடுத்து புறமண வயல் பகுதியில், ஒரு பசுமாட்டினை அடையாளம் தெரியாத ஒரு வனவிலங்கு தாக்கியது. இதில் அந்த மாடு இறந்தது. இந்த பசுவினை புலி அடித்துக் கொண்டிருக்கும் என்று அச்சத்தில் இப்பகுதி மக்கள் உள்ளனர். மேலும் இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 13, 2025
கோத்தகிரியில் தீப்பற்றி எரிந்த கார்!

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, அரவேனு இடையே டாட்டா இன்டிகா கார் ஒன்று, இன்று மதியம் சென்றுகொண்டிருந்தது. அப்போது காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து அங்கு சென்ற தீயணைப்புத்துறையினர், விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். அதிர்ஷ்டவசமாக விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
News October 13, 2025
உதகையில் புலி நடமாட்டத்தால் பரபரப்பு!

நீலகிரி: உதகை முத்தொரைபாலடா சாலையில் உள்ள அண்ணா காலனி பகுதியில் புலி நடமாட்டம் அதிகரித்து வருவதால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். வனத்துறை அலுவலர்கள் இதுகுறித்து தகவல் அறிந்து, புலி நடமாட்டம் குறித்து உறுதிப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் வனக்காவலர்கள் மூலம் தடயங்கள் தேடும் பணி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.