News October 13, 2025
ஆண்களை மட்டுமே விடுவித்த ஹமாஸ்

2 ஆண்டுகளாக பணயக் கைதிகளாக இருந்த 20 பேரை இன்று ஹமாஸ் இஸ்ரேலிடம் ஒப்படைத்தது. நீண்ட காலத்துக்கு பின் குடும்பத்தினருடன் அவர்கள் இணைந்தது உணர்ச்சிகரமான நிகழ்வாக இருந்தது. இந்நிலையில், பணயக் கைதிகளாக உயிருடன் இருந்தவர்கள் எல்லோரையும் ஒப்படைத்து விட்டதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. ஆனால், இவர்களில் யாருமே பெண்கள் இல்லை. இதனால், பெண்களை கொன்றுவிட்டனரா (அ) ஒளித்து வைத்துள்ளனரா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
Similar News
News October 14, 2025
பிஹார் தேர்தல்: எதிர்க்கட்சிகள் தொகுதி ஒதுக்கீடு நிறைவு

பிஹாரில் எதிர்க்கட்சிகளின் தொகுதி ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. RJD 135, காங்கிரஸ் 61, கம்யூனிஸ்ட் கட்சிகள் 29 – 31, VIP 16 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும், RJD தலைவர் தேஜஸ்வி யாதவ் நாளை வேட்புமனு தாக்கல் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 243 தொகுதிகளை கொண்ட பிஹாரில் வரும் நவ.6-ல் தொடங்க உள்ளது.
News October 14, 2025
கேப்டனை நீக்க சொல்லி போர்க்கொடி

இந்தியாவில் நடைபெறும் மகளிர் ODI WC-ல் இந்திய அணி சொதப்பி வருகிறது. AUS, SA அணிகளுடனான அடுத்தடுத்த தோல்விகளால் ரசிகர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். இந்த தொடர் முழுவதுமே இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 21, 19, 9, 22 என சொற்ப ரன்களில் அவுட் ஆனதால், அவரை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி வருகின்றனர். அரையிறுத்திக்குள் நுழைய அடுத்துள்ள 3 போட்டிகளும் இந்திய அணிக்கு முக்கியமானவை.
News October 14, 2025
பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த ஆப்கன்

தொடர்ந்து சீண்டும் பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் அரசு ஷாக் கொடுத்துள்ளது. பாக்.,கின் பாதுகாப்பு அமைச்சர் ஆசிப் கவாஜா, ISI தலைவர் ஆசிம் மாலிக் ஆகியோருக்கு ஆப்கன் வர விசா தரமுடியாது என மறுத்துள்ளது. மேலும், பாக்., உடனான டி20 போட்டியையும் ஆப்கன் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரம், இந்தியாவுடன் நல்லுறவை வளர்க்க ஆப்கன் அமைச்சர் முத்தாஹிதா காத்ரி இந்தியா வந்துள்ளார்.