News April 16, 2024
இறைச்சி கடைகள் மூட உத்தரவு

கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் ஏப்.21ஆம் தேதி ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதற்கும், இறைச்சி விற்பனை செய்யவும் அரசு தடை விதித்துள்ளது. எனவே கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரும் 21ஆம் தேதி இறைச்சி கடைகளை மூடும்படி அறிவுறுத்தப்படுகிறது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (19.4.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News April 19, 2025
சொந்த வீடு யோகம் தருவார் பதிமலை பாலமுருகன்!

பலரும் அறிந்திடாத ஓர் அற்புதமான மலைக்கோயில்தான் பதிமலை பாலமுருகன் கோயில். இக்கோயில் கோவை, ஒத்தக்கால் மண்டபம் பிச்சனூர் அருகே அமைந்துள்ளது. கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டும் பக்தர்கள், இங்கு மனமுருக வேண்டினால் விரைவில் பலிக்குமென்பது ஐதீகம். செங்கற்களை அடுக்கிவைத்து வேண்டினால், விரைவில் சொந்த வீடு வாங்கும் யோகம் அமையும் என்பது நம்பிக்கை. சொந்த வீடு கனவு காணும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News April 19, 2025
வெள்ளியங்கிரி மலையில் ஒருவர் உயிரிழப்பு

தூத்துக்குடியைச் சேர்ந்த புவனேஷ்வரன் (18) என்ற இளைஞர், கோவை, வெள்ளிங்கிரி மலையில் ஏழாவது மலையில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, நேற்றிரவு கீழே இறங்கியுள்ளார். அப்போது கால் தவறி கீழே சரிந்த அவர், 10 மீட்டர் ஆழத்தில் உருண்டு விழுந்துள்ளார். உடனடியாக டோலி பாரம் தூக்கும் பணியாளர்கள் அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.