News October 13, 2025
பூஜா பிறந்தநாளை ஸ்பெஷலாக மாற்றிய ‘ஜனநாயகன்’ படக்குழு

‘பீஸ்ட் ‘ படத்திற்கு பிறகு விஜய்யுடன் பூஜா ஹெக்டே இணைந்துள்ள 2-வது படம் ‘ஜனநாயகன்’. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இந்நிலையில் பூஜா ஹெக்டேவின் பிறந்தநாளையொட்டி படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கயல் என்கிற கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாக படக்குழு ரிவீல் செய்துள்ளது.
Similar News
News October 14, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News October 14, 2025
1,968 பாலஸ்தீனர்களை விடுவிக்க இஸ்ரேல் முடிவு

இன்று இஸ்ரேல் பணயக் கைதிகள் 20 பேர் விடுவிக்கப்பட்டனர். காஸா அமைதி ஒப்பந்தப்படி, சிறைகளில் நீண்டகால அடைக்கப்பட்டுள்ள 1,968 பாலஸ்தீனர்களை விடுதலை செய்யும் ஏற்பாடுகளை இஸ்ரேல் அரசு தொடங்கியுள்ளது. இதற்காக பல்வேறு சிறைகளில் இருந்தோரை ஒப்படைப்பு மையங்களுக்கு அனுப்பும் பணிகளை தொடங்கியுள்ளதாகவும், செயல்முறைகள் நிறைவடைந்த பின் காஸாவுக்கு அவர்கள் அனுப்பப்படுவார்கள் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
News October 14, 2025
டிரம்ப், நெதன்யாகுவை வாழ்த்திய PM மோடி

இஸ்ரேலிய பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டது குறித்து PM மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டது, அவர்களின் குடும்பத்தினரின் துணிவை காட்டுகிறது. அதிபர் டிரம்ப்பின் இணையற்ற அமைதி முயற்சிகள் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் உறுதியான முடிவும் தான் இதை சாத்தியமாக்கி உள்ளதாக பாராட்டிய மோடி, அமைதியை கொண்டு வந்ததற்காக டிரம்ப்புக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.