News October 13, 2025

ஒருநபர் ஆணைய விசாரணை நிறுத்திவைப்பு!

image

கரூர் விவகாரத்தில், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணைய விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விசாரணையில் இதுவரை திரட்டிய ஆதாரங்களை CBI-யிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், மேற்பார்வைக்குழு உடனடியாக முதல் கூட்டத்தை கூட்ட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. CBI விசாரணைக்கு TN அரசு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

Similar News

News October 14, 2025

டிரம்ப், நெதன்யாகுவை வாழ்த்திய PM மோடி

image

இஸ்ரேலிய பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டது குறித்து PM மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டது, அவர்களின் குடும்பத்தினரின் துணிவை காட்டுகிறது. அதிபர் டிரம்ப்பின் இணையற்ற அமைதி முயற்சிகள் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் உறுதியான முடிவும் தான் இதை சாத்தியமாக்கி உள்ளதாக பாராட்டிய மோடி, அமைதியை கொண்டு வந்ததற்காக டிரம்ப்புக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

News October 14, 2025

125 தொகுதிகளை கேட்கிறதா காங்கிரஸ்?

image

தமிழகத்தில் 125 தொகுதிகளை குறிவைத்து நாம் பணியாற்ற வேண்டும் என காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்திருந்தார். இதனால் திமுகவிடம் காங்கிரஸ் 125 தொகுதிகளை கேட்க நினைக்கிறது என செய்திகள் வெளியானது. ஆனால் அனைவரின் தொகுதிகளையும் சேர்த்துதான் அப்படி சொல்லப்பட்டதாக செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார். மேலும் தொகுதி பங்கீடு குறித்து தலைமையே முடிவு செய்யும் என்றும் கூறியுள்ளார்.

News October 14, 2025

கணவன் – மனைவி மனம் கவர செம ஐடியா: TRY பண்ணுங்க

image

தம்பதியர்களுக்குள் அன்னியோன்னியம் மேம்பட வேண்டும் என்றால் பரஸ்பர அன்பு, நம்பிக்கை தேவை. நம் வாழ்க்கைத் துணையின் மனதை ஈர்க்கும் வகையில் நாம் நடந்து கொண்டால் தான், நம் மீது அவர்களுக்கு அன்பு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் மனதை கவர என்னென்ன விஷயங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதை மேலே உள்ள போட்டோக்களை ஸ்வைப் செய்து தெரிந்து கொள்ளுங்கள். நீங்களும் ஐடியாவை கமெண்ட் பண்ணுங்க.

error: Content is protected !!